எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை புதன் கிரகம் ஆளுகிறது. இந்த கிரகமானது புத்திக்கூர்மை, நட்பு உறவு, வர்த்தகம் ஆகியவற்றின் அதிபதியாக இருக்கிறது. எனவே இதன் கீழ் இருப்பவர்கள் சரியாக திட்டமிடுபவர்கள் ஆகவும் புத்திசாலியாகவும் இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு புதன் அவர்கள் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு செல்வத்தை வாரி வழங்குவாராம். மேலும் பொருளாதார தேடலில் இவர்களுக்கு தேவையான திறமையை புதன் வழங்குவார். அதுபோல வாழ்க்கை பதின் ஐந்தில் பிறந்தவர்கள் எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் புதனின் அருளால் அவர்கள் 30 வயதிற்கு மேல் பணக்காரர் ஆகும் யோகம் கிடைக்குமாம்.