கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய யோசனைகளைக் கொண்டிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அதிக கவனம் தேவை. சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தேவையற்ற கவலைகளை குறைப்பதன் மூலம் மனதில் இருந்த சுமை குறையும். வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழைய பழக்க வழக்கங்கள் அல்லது உறவுகளில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய நேரம் இதுவாகும்.
நிதி நிலைமை:
அநாவசிய செலவுகள் அல்லது ஆபத்தான முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது. அரசு சலுகைகள் அல்லது ஆதாயம் கிடைக்கும் பட்ஜெட்டை மறுசீரமைப்பது, சேமிப்பை அதிகரிப்பது, நீண்ட கால முதலீடுகளுக்கு திட்டமிடுவது ஆகியவற்றிற்கு சாதகமான நேரமாகும். ஆரோக்கியமற்ற செலவு முறைகள் அல்லது நிதி சுமைகளை நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் மனரீதியாக பின்னடைவை சந்திக்கலாம் என்பதால் மனதை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். தூக்கத்தை பராமரிக்கவும். அமைதியான சிந்தனையை உங்கள் அன்றாட பழக்கத்தில் இணைக்கவும். வாரத்தின் நடுப்பகுதியில் செரிமானம் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியில் சற்று ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். கால்களில் அசௌகரியம், முதுகு வலி போன்றவை இருக்கலாம். சிறு உடல் நலக்குறைவையும் அலட்சியம் செய்யாதீர்கள்.
கல்வி:
வாரத்தின் ஆரம்பம் கல்விக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தேர்வுகளுக்கு தயாராகும் வரும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆராய்ச்சி அல்லது பகுப்பாய்வு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் உங்களின் செயல் திறன் உயரும். தன்னம்பிக்கையால் கடினமான பணிகளை முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக ஊழியர்களை ஒதுக்கி வைப்பது நல்லது. கூட்டு முயற்சிகளில் அவசரப்பட்டு முடிவெடுப்பதை தவிர்க்கவும். பொறுமை தேவை. தொழிலதிபர்கள் இந்த வாரம் நல்ல லாபத்தை பார்க்க முடியும். எதிரிகள் விலகுவதால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் காரணமாக வருமானம் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இணக்கமாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் தங்கள் துணையிடம் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். உண்மையான மற்றும் நேர்மையான உரையாடல் உறவை மேம்படுத்தும். உணர்ச்சி ரீதியாக பேசுதல் கூடாது. குழந்தைகளின் நலனுக்காகவும் கல்விக்காகவும் செலவிட நேரிடலாம்.
பரிகாரம்:
பகவான் ஸ்ரீ ராமரை வழிபடுவது நல்லது. குழந்தை இல்லாதவர்கள் சந்தான கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள். காலையில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, தண்ணீர் வழங்குவது நன்மை தரும். ஏழைகளுக்கு போர்வை அல்லது உணவு தானம் வழங்குவது சிறந்தது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)