மீன ராசி நேயர்களே, இந்த வாரம் ராசிநாதன் குரு வலுவாக இருப்பதால் மனதெளிவுடன் முடிவுகளை எடுப்பீர்கள். சூரியன் மற்றும் புதன் பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் உங்கள் இலக்குகளை அடைவதில் தீவிரம் காட்டுவீர்கள். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக வார்த்தையில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடவும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் வர வாய்ப்பு உள்ளது. ஆடம்பரச. செலவுகளை தவிர்க்கவும். ஆன்மீகம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். சொத்து மற்றும் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து சிந்திக்கலாம். செவ்வாயின் பலம் காரணமாக துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கடன் கொடுத்தல் வாங்கலை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்:
இந்த வாரம் ஆரோக்கியம் சீராக இருக்கும். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக கண், பல் மற்றும் வாய் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். எனவே முறையான உணவு மற்றும் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். குருவின் பலம் காரணமாக மனத் தெளிவு ஏற்படும். இருப்பினும் சனி பகவானின் நிலை காரணமாக அதிகப்படியான சிந்தனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தியானம் செய்வது நல்லது.
கல்வி:
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுக்கிரனின் அருளால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிற் ஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிற்சார்ந்த படிப்புகள், உணவு மேலாண்மை ஆகிய படிப்புகளில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அதிக உழைப்பு தேவைப்படலாம். எனவே திட்டமிட்டு படிக்க வேண்டியது அவசியம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழிலில் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புக்கள் அல்லது பதவிகள் தேடி வரும். புதன் பகவானின் நிலையால் தகவல் தொடர்பு திறன் மேம்படும். இதன் காரணமாக புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். தொழில் ரீதியாக வெளிநாட்டு பயணங்கள் அல்லது தூரப்பிரதேசங்களுக்கு பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்ப உறவுகள்:
செவ்வாய் பகவானின் நிலை காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். எனவே பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுக்கிரன் வலுவாக இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவு இனிமையானதாக இருக்கும். அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் தந்தை அல்லது தந்தை வழி மூலம் ஆதாயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி காண்பீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபட்டு வருவது பிரச்சனைகளை தீர்க்க உதவும். தினமும் காயத்ரி மந்திரத்தை கூறுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். இயலாதவர்களின் தேவையறிந்து தானம் செய்வது சனி பகவானின் தீய பலன்களை குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)