zodiac signs: வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் 5 ராசிக்காரர்கள் இவங்க தான்

Published : Jun 24, 2026, 07:00 PM IST

சிலர் நல்ல எண்ணத்தில் தான் பேசுவாங்க, ஆனா அதுவே அவங்களுக்கு வினையா முடிஞ்சிடும். அப்படி கருத்து சொல்ல போறேன் உண்மையை சொல்ல போறேன், அட்வைஸ் பண்ண போறேன்னு வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் டாப் 5 ராசிக்காரர்கள் யார் யார்? பார்க்கலாம் வாங்க

PREV
15
மேஷம் :

மேஷம் ராசிக்காரங்க மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசத் தெரியாத 'பச்சை மண்ணு'. ஆனால், கோபம் வந்துட்டா முன்னாடி நிக்கிறது யாருன்னு பார்க்காமல் உண்மையை பட்பட்டுனு போட்டு உடைச்சிருவாங்க. வார்த்தையை விடுறதுக்கு முன்னாடி ஒரு 10 செகண்ட் 'டீப் பிரீத்' (Deep Breath) எடுங்க பாஸ்!

25
மிதுனம் :

இவங்ககிட்ட பேசிட்டே இருக்கலாம், போர் அடிக்காது. ஆனால், பேசிக்கிட்டே இருக்கும் போது எதைச் சொல்லணும், எதைச் சொல்லக்கூடாதுன்னு மறந்துடுவாங்க. அறியாமலே ரகசியத்தை லீக் பண்ணிட்டு, அப்புறம் "ஐயோ! வாயை மூடியிருக்கலாமே" என ஃபீல் பண்ணுவாங்க. எல்லார்கிட்டயும் எல்லாவற்றையும் பகிர்ந்துக்காதீங்க; கொஞ்சம் 'மர்மம்' மெயின்டெய்ன் பண்ணுங்க!

35
சிம்மம் :

மேடையில் பேசினாலும், நாலு பேர் முன்னாடி பேசினாலும் இவங்களுக்கு கெத்து தான் முக்கியம். அந்த கெத்துக்காக இவங்க பேசும் அதிரடி பஞ்ச் டயலாக்குகளே இவங்களுக்கு எதிரியாக மாறிடும். நியாயம் பேசி கடைசியில் வில்லன் ஆகிடுவாங்க. உங்கள் கம்பீரம் வார்த்தைகளில் இல்லை, மௌனத்தில் கூட இருக்குனு புரிஞ்சுக்கோங்க !

45
தனுசு :

இவங்க செம புத்திசாலிங்க. ஆனால், "எனக்கு எல்லாம் தெரியும்" என்கிற டோனில் உண்மையை பளீச்சென்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விடுவார்கள்.அது அடுத்தவங்க மனசை காயப்படுத்தும்னு யோசிக்க மாட்டாங்க. அப்புறம் வம்பில் போய் முடியும். உண்மை எப்போதும் கசக்கும் தான், அதற்காக அதை வேப்பம்பாலாக கொடுக்காமல், கொஞ்சம் சர்க்கரை தடவி சொல்லலாமே!

55
கும்பம் :

சமூக அக்கறை, புரட்சிகரமான கருத்துக்கள் பேசுவதில் இவங்களை அடிச்சுக்க முடியாது. ஆனால், தேவையில்லாத இடத்தில் நியாயத்துக்காக வாதாடி, சம்பந்தமே இல்லாத பஞ்சாயத்துக்குள் தானாக போய் சிக்கிக்குவாங்க. உலகத்தை திருத்துறது இருக்கட்டும், முதல்ல உங்க நிம்மதி முக்கியம் பிரண்ட்ஸ். 'நோ கமெண்ட்ஸ்' சொல்ல கத்துக்குங்க!

Read more Photos on
click me!

Recommended Stories