vastu tips: உங்கள் பெட்ரூமில் இந்த 5 பொருட்கள் இருக்கா? உடனே தூக்கி போடுங்க

Published : Jun 24, 2026, 06:30 PM IST

நிம்மதியான தூக்கமும், கணவன்-மனைவிக்குள் அன்யோன்யமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான இடம் படுக்கையறை (Bedroom). ஆனால், நாம் ஆசையாக வாங்கி வைக்கும் சில பொருட்கள் அந்த அறையின் பாசிட்டிவ் எனர்ஜியை அப்படியே உறிஞ்சிவிடும்.

PREV
15
உடைந்த/ஓடாத கடிகாரம்:

ஓடாத வாட்ச் அல்லது உடைந்த கடிகாரம் படுக்கையறையில் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தையும், கணவன்-மனைவி உறவையும் அப்படியே முடக்கிவிடும். ஓடாத அல்லது இயங்காத பொருட்களுக்கு எப்போதுமே எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை அதிகம். அவற்றால் தீய விளைவுகள் மட்டுமே ஏற்படும்.

25
கட்டிலுக்கு அடியில் குப்பை :

கட்டிலுக்கு அடியில் தேவையில்லாத இரும்புப் பொருட்கள், பழைய துணிகளைச் சேர்த்து வைக்காதீர்கள். கட்டிலுக்கு அடியிலும் இருக்கும் இடத்தை, தேவையற்ற அல்லது பயன்படுத்தாத பொருட்கள் வைக்கும் இடமாக பயன்படுத்துவது மிகப் பெரிய தவறு. இது தூக்கத்தைக் கெடுத்து, தேவையில்லாத கெட்ட கனவுகளையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும்.

35
முட்கள் நிறைந்த செடிகள் அல்லது காய்ந்த பூக்கள் :

அழகுக்காகக் கூட கற்றாழை, கள்ளிச்செடி போன்ற முள் செடிகளையோ அல்லது வாடிப்போன காய்ந்த பூக்களையோ பெட்ரூமில் வைக்காதீங்க. இவற்றை அழகுக்காக வீட்டின் மற்ற இடங்களில் வைக்கலாம். ஆனால் பெட்ரூமில் வைத்தால் பேச்சில் கசப்பையும், உறவில் விரிசலையும் ஏற்படுத்தும். கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடும்.

45
ஆக்ரோஷமான ஓவியங்கள்/புகைப்படங்கள் :

சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான மிருகங்கள், வறண்ட காடுகள் அல்லது போர்க்களப் படங்களை பெட்ரூமில் மாட்டக் கூடாது. இது தம்பதியருக்குள் வீண் சண்டையையும், ஆக்ரோஷத்தையும் தூண்டும்.

55
எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளின் குவியல் :

பழுதடைந்த பழைய மொபைல்கள், லேப்டாப்கள், வயர்களை பெட்ரூமில் குவித்து வைக்காதீங்க. இதிலிருந்து வெளிப்படும் எதிர்மறை ஆற்றல் (Negative Energy) ரத்த ஓட்டத்தையும், நிம்மதியான தூக்கத்தையும் பாதிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories