பணம் வரவேண்டும், கையில் தங்க வேண்டும், சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு. சில நேரங்களில் எவ்வளவு முயற்சி செய்தாலும் வருமானம் அதிகரிக்காமல், எதிர்பாராத செலவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் ஜோதிட நம்பிக்கைகளின்படி, கிரகங்களின் சாதகமான நிலை சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் எதிர்பாராத நிதி வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடப் பலன்கள் தெரிவிக்கின்றன.