ஆன்மீக ரீதியாக, சில ராசிக்காரர்கள் சிவபெருமானின் பேராற்றலையும் பிரபஞ்ச காந்த ஈர்ப்பையும் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் சிவனின் அருள் பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பொதுவாி ஆன்மீகத்தில் சிவ குணங்கள் என சொல்லப்படுவது அமைதி, கோபம், கருணை, கம்பீரம், தலைமைத்துவம், ஆழ்ந்த ஞானம், தர்ம சிந்தனை, மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஆழமான சிந்தனைகள், செயல்பாடுகள் என்பவை தான். இந்த அனைத்து குணங்களும் சில ராசிக்காரர்களிடம் கலந்திருக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சாதாரண மனிதர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத விசித்திர பிறவிகளாக இருப்பவர்களுக்கு சிவனின் அம்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது. கோபத்தில் ருத்ரனாகவும், கருணையில் போலாநாதனாகவும் விளங்கும் ஈசனின் அம்சம் பொருந்திய அந்த 5 ராசிகள் யார், அவர்களின் ரகசிய பலங்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.
26
மேஷ ராசி (தலைமைப் பண்பும் ருத்ர வேகமும்)
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இவர்களிடம் சிவபெருமானின் வீரமும், அநீதியைக் கண்டு பொங்கும் குணமும் இயல்பாகவே இருக்கும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் மூன்றாவது கண் போன்ற கூர்மையான புத்திசாலித்தனம் இருக்கும். இவர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால், இவர்களை யாராலும் வெல்ல முடியாது.
36
சிம்ம ராசி (ஆளுமையும் கம்பீரமும்)
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், ஈசனின் பிரபஞ்சக் கட்டுப்பாடு மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு இணையானவர்கள். இவர்களின் சொல்லுக்குப் பிறர் கட்டுப்படுவார்கள். பிறரை வழிநடத்தும் காந்த சக்தி இவர்களிடம் அதிகம். அதிகாரத் தோரணையைக் குறைத்து, சிவனைப் போல எளியவர்களிடம் கருணை காட்டினால் இவர்களின் புகழ் ஓங்கும்.
காலபுருஷ தத்துவப்படி எட்டாவது ராசியான விருச்சிகம், சிவபெருமானின் ஆக்கல் மற்றும் அழித்தல் (மறுபிறவி) தத்துவத்தைக் குறிக்கிறது. இவர்களைப் புரிந்து கொள்வது கடினம்; எதையும் தாங்கும் மனவலிமையும், ஆன்மீக உள்ளுணர்வும் இவர்களிடம் ஒளிந்திருக்கும். ஆனால் பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, தியானம் மற்றும் வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் பேராற்றல் கிட்டும்.
56
தனுசு ராசி (தர்மமும் நேர்மையும்)
குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள், தட்சிணாமூர்த்தி வடிவமாக விளங்கும் ஈசனின் ஞானப் பண்பைப் பெற்றவர்கள். நியாயத்தின் பக்கம் நிற்பது, பிறருக்கு நல்வழி காட்டுவது மற்றும் உலக பந்தங்களை எளிதில் கடந்து செல்லும் பக்குவம் இவர்களிடம் இயல்பாக இருக்கும். இவர்களின் நேர்மையான வார்த்தைகளே இவர்களின் ஆயுதம். அதை மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.
66
கும்ப ராசி (வைராக்கியமும் தியாகமும்)
சனியின் ராசியான கும்பம், உலக நன்மைகாக ஆலகால விஷத்தை அருந்திய நீலகண்டனின் தியாக மனப்பான்மையைக் கொண்டது.பொதுநலன் விரும்புவது, தனிமையை விரும்புவது மற்றும் எவ்வளவு துன்பம் வந்தாலும் கொள்கையிலிருந்து மாறாத வைராக்கியம் இவர்களிடம் இருக்கும். உலகிற்கு நன்மை செய்ய நினைக்கும் நீங்கள், உங்களின் சுய முன்னேற்றத்திலும் சற்றே கவனம் செலுத்துவது அவசியம்.
ஆன்மீகக் குறிப்பு: சிவபெருமானின் அம்சம் பெற்ற இந்த ராசிக்காரர்கள், திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர, வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கைகூடும்.