ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிறர் செய்யும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டுபிடித்து வெற்றிப் பாதையில் முன்னேறும் திறன் கொண்ட 3 ராசிகள் உள்ளன. அவர்கள் சவால்களை முறியடித்து எப்படி சாதனை படைக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் சிற்பான தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சில ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றால், சிலர் எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் புத்திசாலித்தனமாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக, பிறர் செய்யும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டுபிடித்து அதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொண்டு வெற்றிப் பாதையில் முன்னேறும் திறன் கொண்டவர்கள் சிலர் எப்போதும் சாதனை பட்டியலில் இடம் பிடிக்கின்றனர். இவர்களை எதிர்த்து எத்தனை பேர் வந்தாலும், சினிமா கதாநாயகர்களை போல துணிச்சலாகச் செயல்பட்டு வெற்றியைப் பெறுவார்கள் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட 3 ராசிகளைப் பற்றி விரிவாவும் விளக்கமாகவும் இப்போது பார்ப்போம்.
25
விருச்சிகம் - புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பு
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கூர்மையான கர்பூர புத்திகொண்டவர்கள் என்றால் அது மிகையல்ல. ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர்களின் நோக்கத்தை ஓரளவு புரிந்துகொள்ளும் திறன் இவர்களிடம் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஏமாற்ற முயற்சித்தால் அதை உடனே கண்டுபிடித்து, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்களாம்.
எந்த மோசமான சவால்களும் இவர்களை பயமுறுத்தவே பயமுறுத்தாது. மாறாக ஒவ்வொரு பிரச்சினையையும் தங்களின் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக்கொள்வார்கள் இவர்கள். அதனால் எதிரிகள் எவ்வளவு திட்டமிட்டாலும், இறுதியில் வெற்றி விருச்சிக ராசிக்காரர்களின் பக்கமே இருக்கும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
35
மகரம் - அமைதியாய் இருந்து சாதிக்கும் ஜாம்பவான்கள்
மகர ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் அமைதியை பலவீனம் என்று யாரும் நினைக்கக் கூடாது. எந்த ஒரு முடிவையும் அவசரப்படாமல் ஆராய்ந்து செயல்படுவார்கள். ஒவ்வொரு செயலையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார்கள் என்பதால் இவர்களுக்கு தோல்வியே இருக்காது. தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும்.
யாராவது இவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும், அதற்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக பதிலடி கொடுப்பார்களாம் மகர ராசியினர். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் முன்னேறுவார்கள். அதனால் பலரால் மதிக்கப்படும் தலைமைப் பண்பும் மகரராசியினரிடம் காணப்படும்.
சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர்கள் என்று ஜோதிடமும் ஜோதிட நூல்களும் கூறுகிறது. தைரியம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இவர்களின் மிகப்பெரிய பலம் என்றால் அதுமிகையல்ல.
யாராவது இவர்களை குறைத்து மதிப்பிட முயன்றாலும், செயலால் பதில் சொல்வார்கள். பிரச்சினைகள் வந்தால் ஓடாமல் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெறும் மனப்பக்குவம் இவர்களுக்கு இருக்கும். அதனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், இறுதியில் தங்களின் இலக்கை அடைந்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்களாம்.
55
இனி இவர்கள் காட்டி மழைதான் போங்க.!
ஜோதிட நம்பிக்கைகளின்படி, விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி ஆகியவற்றால் பிறர் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், ஒருவரின் வெற்றி அல்லது தோல்வியை ராசி மட்டுமே தீர்மானிக்காது. கடின உழைப்பு, சரியான முடிவுகள், அனுபவம் மற்றும் விடாமுயற்சி ஆகியவையே வாழ்க்கையில் உயர்வை உருவாக்கும் முக்கிய காரணிகள். ஜோதிடத்தை ஒரு நம்பிக்கையாகவும், ஊக்கமளிக்கும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக்கொள்வது சிறந்த அணுகுமுறையாகும்.