Zodiac Signs: ஜோதிடசாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு தனிமை தான் எப்பவும் பிடிக்கும். அதுதான் அவர்களின் உயிர் நண்பனும் கூட. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம். சிலர் நண்பர்கள், குடும்பம்னு ஜாலியா இருக்க விரும்புவாங்க. ஆனா, சிலர் தங்களுக்குன்னு நேரம் ஒதுக்கி, தனிமையில இருக்கவே ஆசைப்படுவாங்க. ஜோதிடப்படி, சில ராசிக்காரங்களுக்கு இந்த குணம் அதிகமா இருக்கும். அப்படி தனிமையை விரும்பும் அந்த நாலு ராசிகள் எவைன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
25
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்க ஆழமான சிந்தனைகளும், உணர்வுகளும் கொண்டவங்க. இவங்க எந்த விஷயத்தையும் ரொம்ப ஆழமா யோசிப்பாங்க. அதனால, கூட்டத்துல இருக்குறத விட தனிமையில இருக்கவே விரும்புவாங்க. இவங்க தனிமையில இருக்கும்போதுதான் நல்ல முடிவுகளை எடுப்பாங்க, தங்களோட இலக்குகள்ல முழுசா கவனம் செலுத்துவாங்கன்னு ஜோதிடர்கள் சொல்றாங்க.
35
மகரம்
மகர ராசிக்காரங்க ஒழுக்கம், பொறுப்பு, இலட்சியம் இதுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. இவங்களுக்கு நேரம் ரொம்பவே முக்கியம். தேவையில்லாத மீட்டிங், வெட்டிப் பேச்சுக்கு பதிலா, வேலையை முடிக்கிறதுலதான் கவனம் செலுத்துவாங்க. இதனால, இவங்க கொஞ்சம் ஒதுங்கி இருக்குற மாதிரி தெரியலாம். ஆனா, உண்மையில அவங்க தங்களோட எதிர்காலத்துக்காக உழைச்சுட்டு இருப்பாங்க.
கன்னி ராசிக்காரங்க எல்லாத்துலயும் ஒரு பெர்ஃபெக்ஷனை எதிர்பார்ப்பாங்க. ஒவ்வொரு வேலையையும் ரொம்ப கவனமா செய்யணும்னு நினைப்பாங்க. சின்ன விஷயத்தைக் கூட ஆழமா யோசிக்கிறதால, கூட்ட நெரிசலை விட அமைதியான சூழலை விரும்புவாங்க. தனிமையில இருக்கும்போது, தங்களோட சிந்தனைகளை ஒழுங்குபடுத்துறது, புதுசா கத்துக்குறது, புத்தகம் படிக்கிறதுனு தங்களை மெருகேத்திக்க விரும்புவாங்க.
55
கும்பம்
கும்ப ராசிக்காரங்க ரொம்ப வித்தியாசமா யோசிப்பாங்க. அதுதான் அவங்களோட ஸ்பெஷல். புதுமையான யோசனைகள், கிரியேட்டிவான வேலைகள், சமூகத்துக்குப் பயன்படுற விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்துவாங்க. இந்த மாதிரி யோசிக்கிறதுக்கு இவங்களுக்கு தனிமை தேவைப்படும். தேவைப்படும்போது நண்பர்களோட பழகுறது, வெளியில போறது பிடிக்கும்னாலும், தங்களோட தனிப்பட்ட நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க.