2026-ல் இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து.! மருத்துவ செலவு அதிகரிக்கும்.! உடல் நலனில் ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!

Published : Dec 18, 2025, 10:46 AM IST

2026 Rasi Palan: பிறக்க இருக்கும் 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் உடல்நலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
16
2026 புத்தாண்டு ராசி பலன்கள்

2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. வரவிருக்கும் 2026 ஜோதிட ரீதியாக எப்படி இருக்க போகிறது என்பதை அறிய பலருக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது. 2026-ல் நடக்க இருக்கும் பல கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நேர்மறை பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களும் கிடைக்க உள்ளது. 2026 ஆம் ஆண்டில் உடல் நலனில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கலவையான பலன்களையேத் தரும். அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். கண் தொடர்பான கோளாறுகள், ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகள், தலைவலி தொடர்பான பிரச்சனைகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்காமல் போதுமான ஓய்வெடுக்க வேண்டும். செரிமானக் கோளாறுகளை தவிர்க்க சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

36
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஆரோக்கிய ரீதியாக சவாலாக அமையலாம். எட்டாம் வீட்டில் சனியின் அமர்வு, அஷ்டம சனியின் தாக்கம், கேதுவின் நிலை போன்றவை டிசம்பர் வரை நீடிப்பதால் நீண்ட கால நோய்கள் தலை தூக்கலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகள், எலும்பு தொடர்பான உபாதைகள் இருப்பவர்கள், முதுகு வலி ஆகியவற்றை அலட்சியமாக விடுதல் கூடாது. ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது நல்லது. விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வாகனம் ஓட்டும் பொழுது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

46
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 2026 மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ள ஆண்டாக இருக்கும். கேதுவின் சஞ்சாரம் காரணமாக தூக்கமின்மை, தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வயிறு, கல்லீரல் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனதில் எழும் வீண் கவலைகள் மன அமைதியை குலைக்கும். எனவே ஆழ்ந்த உறக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சரியான நேரத்திற்கு உணவு உண்பது, சீரான உடற்பயிற்சி, வழக்கமான பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

56
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் அதிக மருத்துவச் செலவை சந்திப்பீர்கள். சிறிய அலட்சியமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். பயணங்களின் போது விபத்துக்கள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. செரிமான மண்டலம் மற்றும் வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களின் போது உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. பழைய மருத்துவப் பிரச்சனைகள் மீண்டும் வராமல் இருக்க வழக்கமான உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். ஆண்டின் இறுதியில் சிறு அறுவை சிகிச்சைக்கு கூட வாய்ப்பு உள்ளது. எனவே கவனத்துடன் இருக்க வேண்டும்.

66
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் உடல் மற்றும் மனரீதியான சோர்வு அதிகமாக இருக்கும். கால்கள், பாதங்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். தோல் சம்பந்தமான நோய்கள் தலை தூக்கலாம். மனரீதியாக ஒரு வித பயம் அல்லது குழப்பம் நிலவக்கூடும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது நல்லது. சனியின் பாதிப்பிலிருந்து விடுபட சனி பகவானை வணங்குங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories