100 வருடங்களுக்குப் பிறகு குரு சுக்கிரன் உருவாக்கும் சிறப்பு சேர்க்கை.! 5 ராசிகள் வாழ்க்கையில் கொடி கட்டி பறக்கப்போறீங்க.!

Published : Dec 17, 2025, 01:50 PM IST

Guru Shukra Yuti 2025: ஜோதிடத்தின்படி டிசம்பர் 20ஆம் தேதிக்கு பின்னர் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை உருவாக இருக்கிறது. இது ஐந்து ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையை அளிக்க உள்ளது.

PREV
16
குரு சுக்கிரன் சேர்க்கை 2025

ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிர பகவான் இருவரும் சுப கிரகங்களாக அறியப்படுகின்றனர். சுக்கிர பகவான் டிசம்பர் 20ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த காலகட்டத்தில் குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். குருவும் சுக்கிரனும் ஏழாவது பார்வையாக பார்த்து சிறப்பு இணைவை உருவாக்குகின்றனர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சிறப்பு இணைப்பு நடைபெறுவதால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். இந்த இணைவின் தாக்கம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 12 வரை நீடிக்கும். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
மேஷம்

குரு சுக்கிரனின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும். இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். புத்தாண்டு முதல் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விரும்பிய இலக்குகளை அடைய தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சொந்த வீடு கனவு நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

36
சிம்மம்

குரு சுக்கிரனின் சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு துறைகளிலும் சிம்ம ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளைப் பெறுவார்கள். 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் பல நன்மைகளை வழங்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றி பெறும். தொழில் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். உங்கள் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள்.

46
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரன் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை, வணிகம், தனிப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றிலிருந்த அழுத்தங்கள் நீங்கி மனம் நிம்மதி பெறும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.

56
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரன் இணைவு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதிய திசையில் நகரத் தொடங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். இழந்த பணத்தை திரும்ப பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

66
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரன் சேர்க்கை அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு இந்த நேரத்தில் வேலை கிடைக்கும். வணிகத்தில் விரும்பிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் இருந்த மந்தமான பொருளாதார நிலை நீங்கி வசதி வாய்ப்புகள் மேம்படும். வீட்டிற்கான ஆடம்பரச் செலவுகளை செய்வீர்கள். தங்கம், பொன், பொருள், வெள்ளி ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories