Birth Stars: இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், யாருடைய தயவும் இல்லாமல் சொந்த காலில் நின்று சாதிப்பார்கள்.!

Published : Dec 17, 2025, 11:35 AM IST

Birth Stars: ஜோதிடத்தின்படி சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்களாம். அந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Birth Stars

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் யாரையாவது சார்ந்தே வாழ பழகுகிறோம். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் யாருடைய உதவியாவது நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சில பெண்கள் தங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களை அடைகிறார்கள். ஜோதிடத்தின்படி சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் யாரையும் சார்ந்திருக்க விரும்புவதில்லை. யாருடைய உதவியும் இல்லாமல் சொந்த காலில் நிற்க விரும்புகிறார்கள். விடாமுயற்சியுடன் தங்கள் வாழ்க்கையில் உச்சத்தை அடைகிறார்கள். அந்த நட்சத்திரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிலையான சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் கடினமாக உழைத்து முன்னேற வேண்டும் என்கிற மனநிலையைக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் எதை செய்தால் முன்னேற முடியும் என்கிற தெளிவு அவர்களிடம் இருக்கும். தங்கள் இலக்குகளை நோக்கி ஒவ்வொரு படியாக ஏறி வெற்றியை நெருங்குகிறார்கள். வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தாங்கும் வலிமை அவர்களிடம் உண்டு. இந்த நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் நிதி, வணிகம், மேலாண்மை போன்ற துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

36
மகம்

மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தைரியமாக முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டுள்ளனர். வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்கிற இலக்கு குழந்தை பருவத்தில் இருந்தே அவர்களுக்கு இருக்கும். இந்த தெளிவு காரணமாக அவர்கள் சிறுவயதிலிருந்தே இலக்கை நோக்கி நடக்கிறார்கள். அதிகாரம், நிர்வாகம் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் விரைவான அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள்.

46
சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தை பெரிய பாக்கியமாக கருதுகிறார்கள். மற்றவர்களின் கட்டளைகளை பின்பற்றி நடக்க விரும்புவதில்லை. தங்கள் விரும்பும் பாதையை தேர்ந்தெடுத்து அதில் திறமையானவர்களாக மாறுகிறார்கள். எந்த கடினமான சூழ்நிலையானாலும் தனியாக போராட தயங்க மாட்டார்கள். ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவது அல்லது படைப்பு தொழில்களை தேர்ந்தெடுத்து அதில் பெரும் வெற்றியை ஈட்டுகிறார்கள்.

56
மூலம்

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குரு பகவானின் ஆசியை முழுமையாக பெற்றவர்கள். இவர்கள் சிறுவயதில் இருந்தே பல சிரமங்களை எதிர்கொண்டு வலிமையாக வளர்கிறார்கள். அவர்கள் பயத்தை கூட பலமாக மாற்றுகிறார்கள். தாங்கள் படும் கஷ்டங்கள் எல்லாம் தங்களின் வளர்ச்சிக்கு என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்து அதை அடைவதற்கு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் தனது சொந்த காலில் இருந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ளனர். இதுவே அவர்களை எந்தத் துறையை எடுத்தாலும் அதில் வெற்றியாளர்களாக மாற்றுகிறது.

66
திருவோணம்

திருவோண நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும். அவர்கள் தொடர்பு கொள்ளும் திறனில் சிறந்து விளங்குகின்றனர். வார்த்தைகள் மற்றும் அறிவின் மூலம் தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள். யாரையும் சார்ந்த இல்லாமல் தங்கள் சொந்த புத்திசாலித்தனத்தால் வளர்கிறார்கள். ஊடகம், கல்வி, பயிற்சி, ஆலோசனை போன்று துறைகளை தேர்ந்தெடுத்தால் அதில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories