Margazhi Month Rasi Palan 2025: மார்கழி பொறந்தாச்சு.! சூரியன் அருளால் இந்த 5 ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!

Published : Dec 16, 2025, 03:18 PM IST

Margazhi Month Rasi Palan in Tamil: டிசம்பர் 16, 2025 மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில், இந்த மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம். 

PREV
15
மார்கழி மாத ராசி பலன் 2025 - Margazhi Month Rasi Palan in Tamil

சூரியனின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் டிசம்பர் 16, 2025 சூரியன் விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக மார்கழி மாதம் பிறந்துள்ளது. இது தனுசு ராசிக்கு இயற்கையாகவே ஒரு பலமான நிலையாகும். மேலும் இன்றைய தினத்தின் ஒட்டுமொத்த கிரக சஞ்சாரத்தின் அடிப்படையில் மூன்று ராசிகளுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

25
தனுசு

சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் மார்கழி மாதம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். உங்கள் ஆற்றல் அபரிமிதமாக அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த சோர்வுகள் நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும். ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் எதிர்கொள்ளும் மனப்பான்மை உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். ஒரு குழுவை தலைவராக இருந்து வழிநடத்தும் வாய்ப்புகளும் கிடைக்கலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகளைப் பெறும். வேலையிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்கு மார்கழி மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் வழியாக சூரியன் பயணிக்கிறார். இதன் காரணமாக உறவுகளுக்குள் இருந்த மனக்கசப்புக்கள் நீங்கி, அன்பு அதிகரிக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு காதல் கைகூடும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய யோசனைகள் வெற்றியைத் தரும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

45
மேஷம்

மேஷ ராசிக்கு ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானம் வழியாக சூரியன் பயணிக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும் இடமாகும். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் எதிர்பாராத அதிர்ஷ்டம் கூடிவரும். தடைபட்ட காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஒன்பதாவது வீடு தந்தையை குறிக்கும் வீடு என்பதால் தந்தை மற்றும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். உயர்கல்வி கற்பவர்களுக்கும் வெற்றிகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.

55
பிற ராசிகள்

மேற்கூறப்பட்ட ராசிகள் அதிக பலன்களைப் பெற்றாலும் சில ராசிக்காரர்கள் மிதமான பலன்களை பெற இருக்கின்றனர். அவர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். தொழில் கூட்டாளிகள் மூலம் நன்மை உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். சகோதரர் மற்றும் சகோதரிகள் மூலம் நன்மை கிடைக்கும். ஐடி, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இருப்பவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories