Mangal Uday 2026 : 2025-ல் மறைந்த செவ்வாய் 2026-ல் உதயமாகிறார்.! இந்த ராசிகளுக்கு அளவில்லாத செல்வம் கிடைக்கப் போகுது.!

Published : Dec 16, 2025, 02:22 PM IST

Sevvai Uday 2026 Rasi Palangal : நவம்பர் 1, 2025 முதல் அஸ்தம நிலையில் இருக்கும் செவ்வாய் பகவான் 2026 ஆம் ஆண்டு உதயமாக இருக்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மைகளை தர உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Sevvai Uday 2026 Rasi Palangal

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக விளங்கி வருகிறார். இவர் ஒரு நபரின் ஆற்றல், வலிமை, தைரியம் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகவார். மேலும் ரத்தம் தொடர்பான நோய்களுக்கு காரகராகவும் செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவரின் நிலையில் ஏற்படும் மாற்றமானது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது.

25
செவ்வாய் உதயமாகும் தேதி மற்றும் நேரம்

ஜோதிடங்களின்படி செவ்வாய் பகவான் நவம்பர் 1, 2025 அன்று மாலை 6:36 மணிக்கு அஸ்தமன நிலைக்குச் சென்றார். அஸ்தமன நிலையில் இருக்கும் பொழுது அவரின் பலன்கள் பெரிய அளவில் வெளிப்படுவதில்லை. இந்த நிலையில் அவர் மே 2, 2026 அதிகாலை 04:30 மணியளவில் மீண்டும் உதயமாக இருக்கிறார். செவ்வாயின் உதயத்தால் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
ரிஷபம்

செவ்வாய் உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கவுள்ளது. செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன்களை வாரி வழங்குவார். குறிப்பாக ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியமும், உற்சாகமும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானமும், செல்வமும் பெருகும். நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது குறித்து பரிசீலித்து வந்தால் அதை செயல்படுத்துவீர்கள். மே மாதத்திற்குப் பின்னர் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் வரன் கைகூடும். திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும்.

45
சிம்மம்

செவ்வாய் பகவானின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். நிதி நெருக்கடிகளால் போராடுபவர்கள் மே மாதத்திற்குப் பின்னர் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் விடுதலைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சேமிப்பு உயரும். சிறிய மூலங்களில் இருந்து நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், தகராறுகள் தீர்க்கப்படும். ஒரு வலுவான முதலீட்டு திட்டத்தைத் தொடங்குவீர்கள். புத்தாண்டு முதல் திருமண வாழ்க்கை உள்ளிட்ட அனைத்திலும் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

55
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் உதயம் நன்மைகளை அளிக்கும். மே மாதம் தொடங்கி உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். நிலையற்ற வேலையில் இருந்து வருபவர்களுக்கு நிலையான வேலை கிடைக்கும். உங்கள் வேலையின் மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபிப்பீர்கள். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக வரும். தந்தை வழி அல்லது தாய் வழி பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்கள் பொருத்தமான துணையை கண்டுபிடிப்பீர்கள். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி பெருகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories