Birth Date: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பின் வாழ்க்கை அழகாக மாறும்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

Published : Dec 17, 2025, 02:54 PM IST

Numerology: எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை அழகானதாக மாறுமாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Birth Date:

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மாறுவது என்பது இயல்பானது. ஆனால் திருமணம் என்பது காதல், பாசம் மட்டுமல்ல. அது சிலருக்கு வாழ்க்கை முறை மற்றும் நிதி நிலையை மாற்றுகிறது. சிலருக்கு திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையில் நல்ல பரிமாணங்கள் ஏற்படுகிறது. எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம். குறிப்பாக செல்வம் மற்றும் தொழில் விஷயங்களில் அவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் என கூறப்படுகிறது. அந்த தேதிகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

25
மூல எண் 6

ஒவ்வொரு மாதத்திலும் 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 6 ஆம் எண்ணிற்கு கீழ் வருகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மீது சுக்கிரனின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருக்கும். சுக்கிர பகவான் அன்பு, அழகு, ஆடம்பரம், செல்வம், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரகராவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை நாடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை நிலையாக மாறுகிறது. இதன் காரணமாக அவர்கள் நிதி வளர்ச்சி அதிகரிக்கிறது் சுக்கிர பகவான் வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டத்தை வழங்குகிறார். இதன் காரணமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின்னர் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிகின்றனர்.

35
மூல எண் 8

எந்த ஒரு மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8 ஆம் எண்ணிற்கு கீழ் வருகிறார்கள். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்கிற மனநிலையை கொண்டிருப்பார்கள் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் வாழ்க்கைத் துணையின் மகிழ்ச்சிக்காக மேலும் கடின உழைப்பை வழங்குவார்கள். இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் மனைவிகளிடமிருந்தும், பெண்கள் கணவரிடமிருந்தும் இருந்தும் ஆதரவைப் பெறுகிறார்கள். ஒருவருக்கொருவர் இடையே இருக்கும் புரிதல் காரணமாக நிதி நீதியாக நல்ல நிலைக்குச் செல்கிறார்கள் குறிப்பாக வணிகம், ரியல் எஸ்டேட், முதலீடுகள் போன்ற துறைகளில் வெற்றி பெறுகிறார்கள்.

45
மூல எண் 9

ஒவ்வொரு மாதத்திலும் 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 9 ஆம் எண்ணின் கீழ் வருகிறார்கள். இவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் பகவான் ஆற்றல், வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரகராவார். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பகவான் மன உறுதியை வழங்குகிறார். இதன் காரணமாக வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற உறுதியுடன் இருப்பார்கள். திருமணத்திற்குப் பின்னர் இந்த உறுதி மேலும் பன்மடங்கு அதிகரிக்கிறது. தாங்கள் மட்டுமல்லாமல் தங்கள் துணையையும் வாழ்க்கையில் உயர்த்த வேண்டும் என்கிற லட்சியம் கொண்டிருப்பார்கள். எனவே தங்கள் துணையுடன் சேர்ந்து அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைகிறார்கள்.

55
நினைவில் கொள்ளுங்கள்

எண் கணிதத்தின் படி மேற்குறிப்பிடப்பட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை அதிர்ஷ்டத்திற்கான கதவுகளை திறக்கலாம். எண் கணிதம் இவர்களது வாழ்க்கையில் அன்பு, செல்வம், ஸ்திரத்தன்மை மற்றும் வெற்றியை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடின உழைப்பு, தம்பதிகளுக்கு இடையே பரஸ்பர புரிதல், எதிர்கால லட்சியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு யார் கடினமாக உழைக்கிறார்களோ அவர்கள் அனைவருமே வெற்றியை பெறுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories