Astrology: 2026 ஆம் ஆண்டு இந்த 4 ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.! சொத்துக்கள் சேரும்.!

Published : Nov 27, 2025, 03:49 PM IST

2026 Rasi Palan in tamil: ஜோதிடத்தின்படி 2026 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம், நகைகள் வாங்குவதற்கான யோகத்தை வழங்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
2026 ராசி பலன்கள்

2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்ற இருக்கின்றன. இந்த கிரக பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்க உள்ளது. குறிப்பாக சொந்த வீடு, புதிய வாகனம் வாங்க வேண்டும் என்கிற ஆசை சிலருக்கு நிறைவேற வாய்ப்பு உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குறிப்பாக சொந்த வீடு, மனை, நிலம் வாங்கும் கனவு நிறைவேறும். உங்களின் கனவு இல்லத்தை வாங்குவதற்குத் தேவையான அளவு வருமானம் கிடைக்கும். பல ஆதாரங்களில் இருந்து பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். சட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலக்கட்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கிரகங்களின் வலுவான நிலை காரணமாக நீங்கள் விரும்பிய அனைத்தும் இந்த ஆண்டு நிறைவேறும்.

35
சிம்மம்

2026 இல் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு வீடு வாங்கும் யோகத்தை தர இருக்கிறது. செவ்வாய் மற்றும் குரு பகவானின் நிலை காரணமாக ஆடம்பரமான வீட்டை வாங்கவீர்கள். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. பூர்வீக சொத்துக்களும் உங்கள் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சொத்துக்களை வாங்குவதற்கு முன்னர் அதில் ஏதும் வில்லங்கங்கள் அல்லது சர்ச்சைகள் இருக்கிறதா என்பதை ஆழமாக ஆராய்ந்து அதன் பின்னரே வாங்க வேண்டும். தவறுதலான சொத்துக்களை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு புதிய வீடு வாங்கும் யோகத்தை அளிக்க இருக்கிறது. கிரகங்களின் சாதகமான நிலை காரணமாக வீடு, நிலம், புதிய வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள். சனி பகவான் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதன் காரணமாக நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும். வீடு அல்லது நிலம் வாங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வீடு கட்டி பாதியிலேயே தடைபட்டு நின்றவர்கள் மீண்டும் வீட்டை கட்டி முடிப்பீர்கள். இந்த ஆண்டு நீங்கள் செய்யும் முதலீடுகள் அல்லது சொத்துக்கள் பெரிய லாபத்தைத் தரும். 2026 ஆம் ஆண்டு உங்கள் நீண்ட கால கனவுகள் நனவாகும் ஆண்டாக இருக்கும்.

55
மகரம்

2026 ஆம் ஆண்டு பல சுபயோகங்கள் உருவாவதன் காரணமாக மகர ராசிக்காரர்கள் நன்மைகளை அனுபவிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கவும், வீடு கட்டும் வாய்ப்புகளும் கிடைக்கும். நிலம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் எதிர்மறை கிரகங்கள் இந்த ஆண்டு சஞ்சரிக்கப் போவதில்லை. எனவே நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் லாபத்தைப் பெறுவீர்கள். கடந்த காலத்தில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் செய்து அது கைகூடாமல் இருந்தால் அந்தப் பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வரும். சொத்து வாங்குவதில் மீண்டும் மீண்டும் பிரச்சனைகளை சந்தித்தவர்கள் இந்த ஆண்டு வெற்றியைப் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories