வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. மூன்று கிரகங்கள் இணைந்து திரிகிரஹி யோகம், நான்கு கிரகங்கள் இணைந்து சதுர்கிரஹி யோகம், ஐந்து கிரகங்கள் இணைந்து பஞ்சகிரஹி யோகம் ஆகிய யோகங்கள் உருவாகின்றன. இதில் பஞ்சகிரஹி என்பது ஐந்து கிரகங்கள் இணையும் நிகழ்வாகும். 2026 ஆம் ஆண்டு மகர ராசியில் சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சூரியன் இணைவதன் மூலமாக பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது.
மகர ராசி என்பது சனி பகவானின் சொந்த வீடாகும். இந்த ராசியில் 5 கிரகங்கள் இணைவது என்பது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த பஞ்சகிரஹி யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.