
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அவை பிற கிரகங்களுடன் இணைத்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகங்கள் மனிதர்களில் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவானும், குரு பகவானும் சபசத்ம யோகத்தை உருவாக்குகின்றன. இது சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கும், நிதி நிலைமையை மேம்படுத்தவும் உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் பகவான் டிசம்பர் 7ஆம் தேதி குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்கு நகரப் போகிறார். குரு பகவான் டிசம்பர் 5ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றம் சமசப்தம ராஜயோகத்தை உருவாக்குகிறது. செவ்வாய் பகவான் தைரியம், ஆற்றல், வலிமை, வீரம் ஆகியவற்றை வழங்கும் கிரகமாகவும், குரு பகவான் ஞானம், செல்வம், செழிப்பு, கல்வி, அறிவு ஆகியவற்றை வழங்கும் கிரகமாகவும் இருப்பதால் இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் மிகுந்த நன்மைகளை அடைய உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்கள் சமசப்தம ராஜயோகத்தால் எதிர்பாராத நன்மைகளைப் பெற இருக்கின்றனர். மிதுன ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரவுள்ளது. நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். அவர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பல சாதனைகளைப் புரிவீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடிவரும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட சொத்து, மனை, வாகனம் ஆகியவற்றை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
கடக ராசிக்காரர்களுக்கு சம சப்தம ராஜயோகத்தால் சாதகமான காலகட்டம் உருவாகிறது. கடக ராசிக்காரர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் பெரும் வெற்றியை பெறுவார்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். பொருளாதார நிலைமை கணிசமாக மேம்படும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரலாம். கடன் தொகை மீண்டும் வசூலாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். வேலையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தங்கள் நீங்கி சுமூகமான சூழல் நிலவும். வேலை மாறுதலாக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த ராஜயோகம் பல வழிகளில் நன்மையைத் தரும். துலாம் ராசிக்காரர்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புகழ் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகளைப் பெற்றுத் தரும். உங்கள் முன்னேற்றத்திற்கான பாதை எளிதாகும். இந்த காலகட்டத்தில் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பீர்கள். வாழ்க்கையில் அடுத்தடுத்த வெற்றிகள் பெறுவதற்கான கதவுகள் திறக்கப்படும்.
சமசப்தம ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கும் நல்ல காலம் பிறக்க இருக்கிறது. கடந்த காலங்களில் இருந்து வந்த பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் தீரும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நீங்கள் விரும்பிய முன்னேற்றங்களை அடைவீர்கள். உங்களைப் பற்றிய பலரின் தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகள் பிறக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பட்டதாரிகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். திருமண வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)