நெல் விவசாயிகளின் மனிதவள பற்றாக்குறைக்கு தீர்வாக, எஸ்கார்ட்ஸ் குபேட்டா நிறுவனம் நெல் நடவு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் 60% மானியத்துடன் கிடைக்கும் இந்த இயந்திரத்தை கொண்டு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம்.
விவசாயம் என்பது உழைப்பும் பொறுமையும் சேர்ந்த கலவை. ஆனால் தொழில்நுட்ப புரட்சி வந்தபிறகு உழைப்பை குறைத்து, வருமானத்தை உயர்த்தும் கருவிகள் அதிகம் உருவாகி வருகின்றன. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மனிதவளம் பற்றாக்குறை இன்று மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்நிலையில், ஒரே நாளில் பல ஏக்கருக்கு நாற்று நடவு செய்து, விவசாயியின் உழைப்பை கால் அளவுக்கு குறைப்பதோடு, வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கும் நெல் நடவு இயந்திரம் தற்போது விவசாய உலகில் “ரகசிய எந்திரன்” என பேசப்படுகிறது.
27
காசுக்கு ஏற்ற மாடல்கள் கிடைக்கும்
எஸ்கார்ட்ஸ் குபேட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய மூன்றாம் தலைமுறை நெல் நடவு இயந்திரம் விவசாயிகளுக்கான வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. கைகளால் இயக்கும் ரூ.3 லட்சம் மதிப்பிலான மாடல்களிலிருந்து, டிராக்டர் மாதிரி அமர்ந்து ஓட்டக்கூடிய ரூ.19 லட்சம் மதிப்பிலான பெரிய மாடல்கள்வரை பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.
37
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம் கிடைக்கும்
ஒரே நாளில் 1 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரைக்கும் நடவு செய்யக்கூடிய திறன்மிக்க இந்த இயந்திரங்கள், தொழிலாளர்கள் இல்லாத சூழ்நிலையில் நெல் பயிரிடுதலுக்கான பெரிய தீர்வாக உள்ளது. 1 ஏக்கருக்கு நாற்று நடவு கட்டணம் ரூ.5,000. ஒரு நாளில் 5 ஏக்கர் ஓட்டினால் ரூ.25,000 வருமானம் கிடைக்கும். வருடத்தில் வெறும் 80 நாட்கள் இயக்கினாலே ரூ.20 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதனால் பெரிய இயந்திரத்தை வாங்கிய முதலீட்டையே ஒரு பருவத்தில் திரும்பப்பெற முடியும்.
நிலத்தின் தன்மைக்கு ஏற்ப ஒரு குத்தில் 3 முதல் 10 நாற்றுகள் வரை போடக்கூடிய வகையில் விவசாயி விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம். இரவு வேலையிலும் நடவு செய்ய பிரகாசமான எல்.இ.டி விளக்குகள், ஸ்டீயரிங் ஆட்டோ கண்ட்ரோல், நிலத்தில் பதுக்களை சமமாக அமைக்க உதவும் ஸ்மார்ட் அமைப்புகள் போன்ற பல வசதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும, 40-60% வரை அரசின் மானியம் கிடைப்பதால், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளும் இந்த இயந்திரத்தை வாங்கும் பக்கம் திரும்பி வருகின்றனர்.
57
நாற்றை துல்லியமாக நடவு செய்யும் திறன் கொண்டது
இந்த இயந்திரம் நிலம் பொலபொலப்பானதாக இருந்தாலும், கடினமாக இருந்தாலும், நாற்றை துல்லியமாக நடவு செய்யும் திறன் கொண்டது. நேரம் மிச்சம், உழைப்பு மிச்சம், தொழிலாளர் செலவு குறைவு, உற்பத்தி அதிகம்—இவையெல்லாம் ஒரு கருவியால் கிடைக்கும் நன்மைகள்.
67
வாழ்க்கையை மாற்றும் ஒரு பெரிய முன்னேற்றம்
விவசாயத்தின் எதிர்காலம் முழுவதும் தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்கிறது. அதில் இந்த நெல் நடவு இயந்திரம் விவசாயியின் வாழ்க்கையை மாற்றும் ஒரு பெரிய முன்னேற்றம் எனலாம்.
77
விவசாயத்தின் புதிய யுகம் தொடங்கிவிட்டது
மனிதவளத்தை எதிர்பார்க்காமல் தானே வேலை செய்து, வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த “எந்திரனே” விவசாயிக்கு நிஜமான துணைவன். உழைப்பை எளிதாக்கி, வருமானத்தை உயர்த்தும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நேரம் இது—விவசாயத்தின் புதிய யுகம் தொடங்கிவிட்டது!