ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் மைராடா வேளாண் அறிவியல் மையம், விவசாயிகள் மற்றும் விவசாயத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு பயனுள்ள பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதத்தில் இரண்டு முக்கியமான பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நவம்பர் 25-ம் தேதி ‘நுண் கீரைகள் சாகுபடி’ (Micro Greens) பயிற்சி நடத்தப்பட உள்ளது. குறைந்த இடத்தில் கூட லட்சங்களில் வருமானம் ஈட்டிக் கொடுக்கக் கூடிய இந்த மைக்ரோ கிரீன்ஸ் தொழில்நுட்பத்தை விவசாயிகளும், வீட்டுத்தோட்டம் செய்பவர்களும் எளிதில் கற்றுத் தங்கள் வருமானத்தை பலமடங்கு உயர்த்திக்கொள்ளலாம்.
விதைத் தேர்வு, மண் கலவை, துளசி, கொத்தமல்லி, சின்ன கீரை உள்ளிட்ட பல்வேறு நுண் கீரைகளின் வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவை இந்த பயிற்சியில் விரிவாக கற்பிக்கப்படுகின்றன.