ஃபிஃபா உலக கோப்பை: ஒரே ஃப்ரேமில் மெஸ்ஸி - ரொனால்டோ.. நூற்றாண்டின் சிறந்த ஃபோட்டோ என கொண்டாடும் ரசிகர்கள்

Published : Nov 20, 2022, 06:09 PM IST
ஃபிஃபா உலக கோப்பை: ஒரே ஃப்ரேமில் மெஸ்ஸி - ரொனால்டோ.. நூற்றாண்டின் சிறந்த ஃபோட்டோ என கொண்டாடும் ரசிகர்கள்

சுருக்கம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இன்று தொடங்கும் நிலையில், லியோனல் மெஸ்ஸி - கிறிஸ்டியானோ ரொனால்டோ இணைந்திருக்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது. இந்த நூற்றரண்டின் சிறந்த ஃபோட்டோ இதுதான் என்று ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.  

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. 22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை கத்தாரில் இன்று தொடங்கி டிசம்பர் 18ம் தேதி வரை நடக்கவுள்ளது. உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலக கோப்பை தொடர் தான் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படுவதாகும். இந்த உலக கோப்பையில் 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் இருவரும் தங்கள் நாட்டுக்கு கோப்பையை வென்று கொடுக்க போராடுவார்கள் என்பதால் இந்த ஃபிஃபா உலக கோப்பை மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

FIFA World Cup: கேரளாவில் களைகட்டிய கொண்டாட்டம்.. பிரம்மாண்ட கட் அவுட்டுகள்! மெஸ்ஸியின் கட் அவுட் உடைந்த சோகம்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்து விளையாட்டில் மிகப்பெரும் ஜாம்பவான்களாக ஜொலித்துவரும் மெஸ்ஸி - ரொனால்டோ ஆகிய இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் அவர்களது ரசிகர்கள் இடையே பல ஆண்டுகளாக பற்றி எரிகிறது. இருவருமே திறமையளவில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதால், இருவரில் யார் ஃபோர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றனர், இருவரில் யாருக்கு டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் இருக்கின்றனர் என்பதை பொறுத்து இருவரது ரசிகர்களும் மோதிவருகின்றனர்.

இது ஆண்டாண்டாக நடந்துவருகிறது. இருவரும் பொதுவெளியில் பெரிதாக ஒன்றாக சந்தித்துக்கொள்வதில்லை. களத்திற்கு வெளியே இருவரும் இணைந்த ஃபோட்டோ எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஃபிஃபா உலக கோப்பை இன்று தொடங்கும் நிலையில், இருவரும் இணைந்து Louis Vuitton நிறுவன விளம்பர ஃபோட்டோஷூட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

அந்த ஃபோட்டோவில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் செஸ் ஆடுவது போன்று போஸ் கொடுத்துள்ளனர். மெஸ்ஸி - ரொனால்டோ ஃபோட்டோவை கண்ட ரசிகர்கள், இந்த நூற்றாண்டின் சிறந்த ஃபோட்டோ இதுதான் என்று செம குஷியில் அதை கொண்டாடிவருகின்றனர். ஃபிஃபா உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இருபெரும் கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்ஸி - ரொனால்டோ இருவரும் இணைந்திருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் தூண்டிவிடப்பட்டுள்ளது.

FIFA World Cup:வரலாறு காணாத அளவிற்கு கத்தாரில் அதிகபட்ச டிக்கெட் விலை! செலவு, பரிசுத்தொகை, வருவாய் முழு விவரம்

மேலும் இந்த ஃபோட்டோவை கண்ட ரசிகர் ஒருவர், மெஸ்ஸி - ரொனால்டோ ஆடும் செஸ் விளையாட்டில் அந்த ஆட்டம் இருக்கும் சூழல், 2017ல் மாக்னஸ் கார்ல்சன் - ஹிகாரு ஆகிய ஆட்டத்தில் இருந்த மாதிரியான சூழல் ஆகும். அந்த போட்டி டிராவில் முடிந்தது என மிக துல்லியமாக பார்த்து பதிவிட்டுள்ளார். ஆகமொத்தத்தில் மெஸ்ஸி - ரொனால்டோ ஃபோட்டோவை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். 

ரவுண்ட் ஆஃப் 32-ல் அர்ஜெண்டினாவும் போர்ச்சுகலும் வெவ்வேறு குழுக்களில் இடம்பெற்றிருப்பதால் இந்த சுற்றில் இரு அணிகளும் மோதிக்கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் மோதும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!
Baba Vanga கணிப்பு பலிக்குமா? 2026 FIFA உலகக் கோப்பையை வெல்ல போவது இந்த அணியா?