FIFA World Cup 2022: காலிறுதி சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன...? முழு போட்டி விவரம்

Published : Dec 07, 2022, 04:46 PM IST
FIFA World Cup 2022: காலிறுதி சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன...? முழு போட்டி விவரம்

சுருக்கம்

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்று முடிந்த நிலையில், காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், காலிறுதி எந்தெந்த அணிகள் மோதுகின்றன என்ற போட்டி விவரங்களை பார்ப்போம்.  

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுகல், ஃபிரான்ஸ், ஜப்பான், ஸ்பெய்ன், நெதர்லாந்து, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, இங்கிலாந்து, செனகல், குரோஷியா, தென்கொரியா, மொராக்கோ, சுவிட்சர்லாந்து ஆகிய 16 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றன. 

இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி மெஹிடி ஹசன் அபார சதம்! இந்தியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, போலந்து, செனகல் அணிகளை வீழ்த்தி முறையே நெதர்லாந்து, அர்ஜெண்டினா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. ஜப்பானை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி குரோஷியா அணியும், அதேபோல் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெய்னை வீழ்த்தி மொராக்கோ அணியும் காலிறுதிக்கு முன்னேறின.

தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணியும், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று நடந்த கடைசி போட்டியில் சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணியும் காலிறுதிக்கு முன்னேறின.

நான்கரை வருஷத்துக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்

காலிறுதி போட்டி அட்டவணை:

1. குரோஷியா - பிரேசில் (டிசம்பர் 9 இரவு 8.30 மணி)
2. நெதர்லாந்து - அர்ஜெண்டினா (டிசம்பர் 10, 12.30 AM)
3. மொராக்கோ - போர்ச்சுகல் (டிசம்பர் 10, இரவு 8.30 மணி)
4. இங்கிலாந்து - ஃபிரான்ஸ் (டிசம்பர் 11, 12.30 AM)
 

PREV
click me!

Recommended Stories

FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!
Baba Vanga கணிப்பு பலிக்குமா? 2026 FIFA உலகக் கோப்பையை வெல்ல போவது இந்த அணியா?