FIFA World Cup: பரபரப்பான காலிறுதி போட்டியில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா

By karthikeyan V  |  First Published Dec 9, 2022, 11:26 PM IST

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் பிரேசில் - குரோஷியா இடையேயான பரபரப்பான காலிறுதி போட்டி 1-1 என டிராவில் முடிய, பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது.
 


22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அர்ஜெண்டினா, பிரேசில், ஃபிரான்ஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, குரோஷியா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

பிரேசில் - குரோஷியா இடையேயான முதல் காலிறுதி போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றாலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

பெத் மூனி அபார பேட்டிங்.. முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி

எனவே ஆட்டத்தின் 2ம் பாதி மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. 2ம் பாதியிலும் இரு அணி வீரர்களும் தீவிரமாக முயன்றும் கோல் அடிக்கவில்லை. 

அதன்பின்னர் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 106வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடித்தார். 

அதன்பின்னர் கோலுக்காக கடுமையாக போராடியது குரோஷியா அணி. பிரேசில் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்ற மமதையில் கொஞ்சம் அசால்ட்டாக ஆட, வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிய 4 நிமிடங்கள் இருந்த நிலையில், குரோஷியா வீரர் புருனோ பெட்கோவிச் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனடைந்தது.

இதையடுத்து போட்டியின் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா முதல் 4 வாய்ப்பிலும் கோல்களை அடிக்க, பிரேசிலோ முதல் 4 வாய்ப்பில் 2 கோல் மட்டுமே அடித்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டின் மூலம் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா.

FIFA World Cup 2022: காலிறுதி சுற்றில் எந்தெந்த அணிகள் மோதுகின்றன...? முழு போட்டி விவரம்

இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பிரேசில் அணி காலிறுதியில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. பிரேசில் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். 
 

 

click me!