ஸ்பெயினில் தலைத்தூக்க தொடங்கிய கொரோனா... இளம் கால்பந்து பயிற்சியாளர் மரணத்தால் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Mar 17, 2020, 5:23 PM IST
Highlights

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 7200 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவாக இருக்குமென்பதால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், 21 வயது இளம் கால்பந்து வீரரும், பயிற்சியாளருமான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மலாகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா (21) கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 7200 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உடலின் நோய் எதிர்ப்புச் சக்திகள் குறைவாக இருக்குமென்பதால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், 21 வயது இளம் கால்பந்து வீரரும், பயிற்சியாளருமான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மலாகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனால், பிரான்சிஸ்கோ கார்சியா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது சக கால்பந்து வீரர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மலாகாவில் உள்ள கால்பந்து கிளப்பான அத்லெடிகோ போர்ட்டாடா அல்டா என்ற கிளப்பின் இளம் வீரர்களுக்கான பயிற்சியாளராக அவர் இருந்து வந்தார். 21 வயதில் இவர் பலியாகியிருப்பது ஸ்பெயினில் இளம் வயதில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையை 5-ஆக அதிகரித்துள்ளது.

இளம் பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா மரணம் குறித்து சக பயிற்சியாளர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;- தற்போது நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்வது பிரான்சிஸ்? தேவைப்படும்போது நீங்கள் எப்போதும் எங்களுடன் இருந்தீர்கள். லீக்கில் வெற்றியை நாம் எவ்வாறு தொடரப் போகிறோம்? எப்படி என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், நாங்கள் உங்களுக்காக விளையாடுகிறோம்.  நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று பதிவிட்டுள்ளனர். 

click me!