அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடந்துவருகிறது. இதில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சிலி மற்றும் அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி வென்றது.
வெற்றிக்கு பின்னர் பேசிய அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். தென் அமெரிக்க கூட்டமைப்பில் பிரேசில் ஆதிக்கம் செலுத்தி முறைகேடுகளை செய்கிறது. பிரேசிலுக்கு இந்த கோப்பை ஒதுக்கப்பட்டுவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது. ஊழலும் நடுவர்களும் சேர்ந்து கால்பந்தாட்டத்தின் சுவாரஸ்யத்தை குறைப்பதோடு ஆட்டத்தை ரசிக்கவிடாமல் செய்கின்றன என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
undefined
மெஸ்ஸி செம கடுப்பாகி இப்படி பேசியதற்கு காரணம் இருக்கிறது. சிலி அணிக்கு எதிரான போட்டியில் தவறு புரிந்ததாக மெஸ்ஸி வெளியே அனுப்பப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பிரேசில் அணிக்கு எதிரான போட்டியில், 2 முறை அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்த போட்டியில் பிரேசிலிடம் 2-0 என அர்ஜெண்டினா தோற்றது. ஒருவேளை அந்த பெனால்டி வாய்ப்புகள் கிடைத்திருந்தால் போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.
இந்த செயல்பாடுகளை எல்லாம் பாரபட்சமானதாக கருதிய மெஸ்ஸி, தென் அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பின் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.