பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரரை கால்பந்தாடும் கொரோனா.. 4வது டெஸ்ட்டிலும் பாசிட்டிவ்! ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 5:24 PM IST
Highlights

பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் பவுலா டைபாலாவிற்கு கடந்த 6 வாரத்தில் 4வது முறையாக செய்யப்பட்ட சோதனையிலும் கொரோனா பாசிட்டிவ் என வந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி, பேரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் இதுவரை உலகம் முழுதும் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உயிரிழப்புகளையும் பொருளாதார சீரழிவையும் ஏற்படுத்திவருகிறது. 

கொரோனாவால் அனைத்து சமூக, பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கடந்த 6 வாரத்திற்கு முன் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அர்ஜெண்டினா கால்பந்து வீரர் பவுலா டைபாலாவிற்கு ஒன்றரை மாதத்தில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், 4வது முறையாக செய்யப்பட்ட டெஸ்ட்டிலும் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. 

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான பவுலா டைபாலா, இத்தாலியில் புகழ்பெற்ற யுவென்டஸ் கால்பந்து கிளப் அணிக்காக ஆடியபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் கால்பந்து ஆடிய டைபாலாவிற்கு கொரோனா உறுதியானது. ஆனால் சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பிறகும் கூட, 4வது பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. 
 

click me!