தீபாவளி ஸ்பெஷல் முந்திரி கேக்…!

First Published Oct 25, 2016, 2:33 AM IST
Highlights


தீபாவளி ஸ்பெஷல் முந்திரி கேக்…!

தீபாவளிக்கு  சூப்பரான  முந்திரி  கேக்   செய்து சாப்பிடலாம்  வாங்க........

இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமானது முந்திரி கேக். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்று. இந்த முந்திரி கேக்கை வீட்டிலே எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

முந்திரி - 200 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

தண்ணீர் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

குங்குமப்பு+ - ஒரு சிட்டிகை

செய்முறை :

முதலில் முந்திரியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

பிறகு, பாகு பதம் வந்தவுடன் அரைத்த முந்திரி விழுது, சிறிது சிறிதாக கொட்டி கிளறவும். குங்குமப்பு+ சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

 கலவை கெட்டியாக வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் கலவை நன்றாக இருக்கும்.

பிறகு, நெய் தடவிய தட்டில் ஊற்றி, சிறிது சூடாறியதும் உங்களுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொண்டால் சுவையான முந்திரி கேக் தயார்.

 

இவ்ளோ  ஈசியான முந்திரி  கேக்  செய்ய தயாராகலாமா.......!!!

 

 

 

 

click me!