தீபாவளி  புகழ்   “அதிரசம்”  செய்யலாம்.... வாங்க .....!!!

First Published Oct 21, 2016, 8:28 AM IST
Highlights


தீபாவளி  புகழ்   “அதிரசம்”  செய்யலாம்.... வாங்க .....!!!

தீபாவளி  என்றாலே  நமக்கு   முதலில்   நினைக்க  தோன்றுவது  அதிரசம்  தான் . அந்த அளவுக்கு  அனைவருக்கும்  பிடித்த இனிப்பு   என்றால்  அது  அதிரசம் தான்  என்பதில் எந்த மாற்றமும்  இல்லை.

சொல்ல போனால்,   தற்போதைய   காலத்தில்,  தீபாவளிக்கு  அதிரசம் செய்வது நிறைய வீடுகளில்  நிறுத்திவிட்டு,  அதனை கூட  வெளி கடைகளில் இருந்து  வாங்குவது கொஞ்சம் காலமாக  பெருகி  வருகிறது.

தேவையான  பொருட்கள் :

பச்சரிசி-1/2 கிலோ;

வெல்லம் – 1 கிலோ;

பொறிக்கத் தேவையான எண்ணெய்

செய்முறை:

பச்சரிசியை நன்கு கழுவி,  நிழலில் உலர்த்தி  லேசாக ஈரமாக இருக்கும்போதே எடுத்து மெஷினில் அரைத்து  சலித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை ஏற்றி, அதில் சிறிது நீர் விட்டு அதில் வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கிளறவும். வெல்லப்பாகு, கம்பிப் பதத்துக்கு வந்ததும் , அந்த பாகுக் கரைசலை பச்சரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.

மாவும் பாகும் நன்றாகக் கலந்த பின் , இந்தக் கலவையை நன்றாக மூடி வைக்கவும். மூன்றாம் நாள் திறந்து  அந்தக் கல்வையை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, ஒரு வாழை இலையில் சிறுசிறு வடைகளாகத் தட்டி எடுத்து, அடுப்பில் காய்ந்துகொண்டிஉக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

இரு பக்கமும் நன்கு வெந்ததும் ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவே‘ அதிரசம்‘  ஆகும்.

மிகவும்  சுவை வாய்ந்த  இந்த  அதிரசத்தை  நம்  சொந்தங்கள் உற்றார்  உறவினர்  அனைவருக்கும்  கொடுத்து மகிழுங்கள்.......

இந்த தீபாவளி  இனிக்கும்  தீபாவளியாகதான்  இருக்கும்........

 

              

click me!