பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்

Published : Jan 19, 2023, 05:53 PM IST
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்: தட்டி கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்

சுருக்கம்

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே இளம் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்களிடம் உறவினர்கள் நியாயம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவர்கள் மீது கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரபட்டியில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் வீட்டின் முன்பாக இருந்த சிறிய நீர் தேக்க தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் குளித்ததை செல்போனில் வீடியோ எடுத்ததாக இளம் பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

பெண்களின் உறவினர்கள் இளைஞரை தட்டி கேட்டதால் இளைஞர் அவர்களிடமிருந்து தப்பி சென்று விட்டார். தப்பி சென்ற இளைஞர்  தனது ஊரான மாரம்பாடிக்கு சென்று பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அழைத்து வந்து விறகு கட்டையால் பெண்கள் மற்றும் ஆண்களை தாக்கியதால் மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்  பலத்த காயம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் வேடச்சந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விறகு கட்டையால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் வேடசந்தூர் காவல் துறையினர் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி