ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் கண்ட இடத்தில் கை வைத்து இளைஞர் பாலியல் சீண்டல்..!

By vinoth kumar  |  First Published Jan 19, 2023, 1:00 PM IST

சென்னை வருமான வரித்துறையில், இணை ஆணையராக பணி புரிபவர் நந்தினி. இவர், வெளியூர் செல்வதற்காக சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் ரயில் நிலைய 6வது நுழைவாயில் வழியாக, ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். 


சென்னையில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட  தனியார் கூரியர் நிறுவன ஊழியரை  ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை வருமான வரித்துறையில், இணை ஆணையராக பணி புரிபவர் நந்தினி. இவர், வெளியூர் செல்வதற்காக சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் ரயில் நிலைய 6வது நுழைவாயில் வழியாக, ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த 23 வயது இளைஞர் பெண் அதிகாரியை தொட்டு சீண்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தனிமையில் பேசிய காதல் ஜோடி.! காதலனை மிரட்டி காதலியை கூட்டு பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம்

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அதிகாரி அலறி கூச்சலிட்டார். உடனே இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அத்துமீறலில் ஈடுபட்ட அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞர் சென்னை யானைகவுனியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரியவந்தது. அவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு இடையூறு.. கணவரை போட்டு தள்ளிவிட்டு சேப்டியாக செப்டிக் டேங்கில் மறைத்த கொடூர மனைவி..!

click me!