கர்நாடக மாநிலம் பெங்களூரு, சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஷி(19). இவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு, சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராஷி(19). இவர், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல கல்லூரி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர் அந்த இளம்பெண்ணை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டு விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த போது இடையூறு.. ஆத்திரத்தில் குழந்தை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன்
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- காதலியை ஆசை தீர அனுபவித்துவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!