கரூர், குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் லாரி ஓட்டுநரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டி கொலை செய்த கஞ்சா போதை ஆசாமியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கஞ்சா போதையில் மனம் போன போக்கில் தன்னை பெரிய ரௌடியாக காட்டிக்கொண்டு வலம் வந்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.
சாலையோரம் இடம் பிடிப்பதில் போட்டி; மத்திய அரசு ஊழியர் கல்லால் அடித்துக் கொலை
இந்த போட்டியினை விக்னேஷ், மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த பிரவீன் அங்கு உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் லாலாப்பேட்டை ஆண்டியப்பன் நகர் மைதானத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் வந்த பிரவீன் விக்னேஷின் கழுத்தில் மீன் வெட்டும் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு முக அழகிரி நேரில் அஞ்சலி
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நண்பர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் பரிதாபமாக உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்திருந்த விக்னேஷின் உடலை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.