
திருப்பத்தூர் அருகே இளம்பெண் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே உள்ள செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பிரியா(22). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் சந்தோஷ்பிரியா, தனது தாத்தா வளர்ப்பில் வளர்ந்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த இளம்பெண் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி சந்தோஷ்பிரியா கிணற்றில் சடலம் கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- அண்ணி என்று கூட பாராமல் நடுரோட்டில் கொழுந்தன் செய்த வெறிச்செயல்..!
இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தோஷ்பிரியா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன்(21) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மகேந்திரன், சந்தோஷ்பிரியாவை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொன்று கிணற்றில் சடலத்தை வீசியது தெரியவந்தது. மகேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ்பிரியாவை நான் ஒருதலையாக காதலித்து வந்தேன்.
எனது காதலை அவரிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை. என்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எனக்கு அவர் மீது தீராத ஏக்கம் இருந்தது. கடந்த ஜூலை 22ம் தேதி இரவு சந்தோஷ்பிரியா தெருவில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நான், அவரை பைக்கில் அமரும்படி கூறினேன். மேலும் என்னை காதலிக்கும்படி கூறினேன். ஆனால் அவர் பைக்கில் ஏற மறுத்து, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடை ந்த நான், அவளை சரமாரி தாக்கி அருகில் உள்ள கம்புக்கொல்லையில் பலாத்காரம் செய்தேன். பின்னர் கழுத்தை நெரித்துக்கொன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி விட்டேன் என்றார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை.. நேரில் பார்த்த மகன்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?