கடனை அடைக்க எடுத்த முடிவு.. மனைவியை இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி கணவன் போட்ட ஸ்கெட்ச் !

Published : Aug 07, 2022, 09:23 PM IST
கடனை அடைக்க எடுத்த முடிவு.. மனைவியை இன்சூரன்ஸ் எடுக்க சொல்லி கணவன் போட்ட ஸ்கெட்ச் !

சுருக்கம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தில் வசிப்பவர் பத்ரிபிரசாத். இவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருந்துள்ளன. அவற்றை எப்படி அடைப்பது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளார். இதனால் இணையதளத்தில் சென்று பல்வேறு வீடியோக்களை பார்த்து உள்ளார். இதன்பின்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதுதான் அந்த விபரீத முடிவாகும். அவரது மனைவி பூஜாவை இன்சூரன்ஸ் பெற செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..அதிமுக ஆபீசுக்கு வரும் சசிகலா.. அடுத்து என்ன நடக்குமோ? பதற்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் !

இதனை தொடர்ந்து அவர் போட்ட பிளான் படி, பூஜாவை போபால் சாலையில் வைத்து, மனஜோட் பகுதியருகே இரவு 9 மணியளவில் அவரது கணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பூஜா காயமடைந்து உள்ளார். பின்னர், அவர் சிகிச்சையின் போது உயிரிழந்து விட்டார். இதற்கு முன் அவர் தனது கடன்களை அடைக்க இணையதளத்தில் வீடியோக்களை தேடி பார்த்த பின்னரே, மனைவியை காப்பீடு செய்யும்படி வற்புறுத்தி உள்ளார் என்று பிறகு தான் தெரிய வந்தது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

மனைவியை கொலை செய்து விட்டு காப்பீடு பணம் பெற்று கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளார். ஆனால், அவரது திட்டம் அரங்கேறுவதற்குள் போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டார். பத்ரிபிரசாத்துடன் தொடர்புடைய கூட்டாளி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி