எனக்கு ஆண் குழந்தை வேணும்.. மனைவியை உயிரோடு கொளுத்திய கணவன் - பரபரப்பு சம்பவம்

Published : Aug 07, 2022, 08:23 PM IST
எனக்கு ஆண் குழந்தை வேணும்.. மனைவியை உயிரோடு கொளுத்திய கணவன் - பரபரப்பு சம்பவம்

சுருக்கம்

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பா நாடு வேதநாயகி புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு என்கிற சாமிநாதன். இவரது மனைவி காயத்ரி. பிரபுவுக்கும், காயத்ரிக்கும் திருமணம் ஆகி சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகிறது.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தனக்கு ஆண் குழந்தை இல்லை என்ற விரக்தி பிரபுவுக்கு இருந்து வந்துள்ளது.

இதனால் காயத்ரிக்கும், பிரபுவுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காயத்ரி மண்ணெண்ணெய் ஊற்றி தீ காயங்களுடன் எரிந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தபோது போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தனது மாமியார் அன்னக்கிளி, மாமனார் இருவரும் தன்னை பிடித்துக்கொண்டதாகவும், எனது கணவர் பிரபு மண்ணெண்ணெய்எடுத்துவந்து என் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயத்ரியை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக மாமனார் மாமியார் மற்றும் கணவர் மீது பாப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னாவின் உத்தரவின் பேரில் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி  மாமியார், மாமனார் மற்றும் கணவன் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கொடூரம் ! காதலித்த மகளுக்கு விஷ ஊசி போட்ட தந்தை.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி