பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் அறுத்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் துடிப்பு.. வெளியான அதிர்ச்சி காரணம்..!

By vinoth kumar  |  First Published Nov 3, 2022, 2:59 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நவீன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். 


ஈரோடு அருகே சாலையில் நடந்து சென்ற 11ம் வகுப்பு பள்ளி மாணவியை இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நவீன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, நவீன் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்

இதனையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்ததும் நவீன் அந்த மாணவி ஸ்வேதாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது மாணவியை வழிமறித்த இளைஞர் திடீரென பிளேடால் வலுக்கட்டாயமாக மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த இளைஞர் அங்கிருந்து தப்பித்தார். 

இதையும் படிங்க;- பெற்ற மகளை சீரழித்து கர்ப்பிணியாக்கிய காமக்கொடூரம்.. தந்தை உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்.!

மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்ததையடுத்து மாணவியை மீட்ட பொதுக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து பவானிசாகர் போலீசார் தலைமறைவாக உள்ள நவீன் என்பவரை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி

click me!