கோவை கார் வெடி விபத்து சம்பவம்..! மத கலவரத்தை தூண்டும் பதிவு..! கிஷோர் கே சாமி மீது வழக்கு பதிவு

By Ajmal KhanFirst Published Nov 3, 2022, 1:21 PM IST
Highlights

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பகை உணர்வை தூண்டும் வகையில் டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

கோவை கார் வெடி விபத்து

கோவையில் கடந்த 23 ஆம் தேதி உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்பவர் உயிர்இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் வெடி பொருட்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சதி திட்டத்திற்கு திட்டமிட்ட 6 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்ஐஏக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி பங்கேற்பு..! செண்டை மேளம் வாசித்து உற்சாகம்

கிஷோர் கே சாமி மீது வழக்கு

இதற்கிடையே சமூக வலை தளத்தில் கோவை கார் வெடி விபத்து தொடர்பாக பல்வேறு கருத்துகள் பதியப்பட்டது. இதனை தமிழக சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். அதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளராக இருக்கும் கிஷோர் கே சாமி பதிவு செய்த டுவிட்டர் தகவலில் இஸ்லாமிய ஜமாத் அமைப்பினரை விமர்சித்து பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு தொடர்பான ட்விட்டர் பதிவில் கிஷோர் கே சாமி  என்பவரின் பதிவு மிகவும்  ஆபத்தானது என கண்டு அறியபட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  பகை வெறுப்பை ஊக்குவிப்பதன் மூலம் குழப்பத்தை உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து..! கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு வந்த ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள்..! வரவேற்ற பூசாரிகள்

click me!