சென்னையில் பயங்கரம்.. பொதுமக்கள் மத்தியில் பிரியாணி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை..!

Published : Nov 03, 2022, 10:34 AM ISTUpdated : Nov 03, 2022, 10:39 AM IST
சென்னையில் பயங்கரம்.. பொதுமக்கள் மத்தியில் பிரியாணி கடை உரிமையாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை..!

சுருக்கம்

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி(33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் இருந்த போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து நாகூர்கனி அதிர்ச்சியடைந்தார். 

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் பிரியாணி கடை உரிமையாளர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனாவரம் மார்க்கெட் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாகூர்கனி(33) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் இருந்த போது அங்கு 3 இருசக்கர வாகனத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்ததை பார்த்து நாகூர்கனி அதிர்ச்சியடைந்தார். இந்த கும்பலிடம் தப்பிக்க முயற்சித்த போது சுத்துபோட்டு சரமாரியாக வெட்டினர். 

இதையும் படிங்க;- கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நாகூர்கனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பின்னர், அந்த சவகாசமாக இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றனர். உடனே அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிழந்து கிடந்த நாகூர்கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ததனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- அடப்பாவிங்களா.. இதுக்காகவா புதுமாப்பிள்ளை கொலை செஞ்சீங்க.. குற்றவாளிகள் சொன்ன பகீர் வாக்குமூலம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!