அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது.. அதனால் தான் கொன்றேன்! கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்

Published : Nov 02, 2022, 10:26 PM ISTUpdated : Nov 02, 2022, 10:28 PM IST
அந்தரங்க படங்கள் வெளியாக கூடாது.. அதனால் தான் கொன்றேன்! கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில்  அதிரடி திருப்பம்

சுருக்கம்

கஷாயத்தில் விஷம் கலந்து இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 14 ஆம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்து கடந்த 25 ஆம் தேதி அவர் உயிர் இழந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டபோது ஷாரோன், காதலி கிரீஸ்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது. அதில், நீ கொடுத்த கசாயத்தைக் குடித்ததில் எனக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. கல்லீரல், கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் என்று கூறுகிறார். அப்போதும் காதலி கிரீஸ்மா கல் நெஞ்சத்தோடு தான் வழக்கமாகக் குடிக்கும் கசாயத்தைதான் உனக்கும் தந்தேன் என்கிறார்.

இதையும் படிங்க..குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!

ஷாரோன்ராஜின் ரத்தமாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்திலும், காதலி கிரீஸ்மாவை விட்டுக் கொடுக்கவில்லை. அவர் தனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று சந்தேகிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். பிறகு போலீஸ் விசாரணையில் கிரீஸ்மா கைது செய்யப்பட்டார்.

நெடுமங்காடு போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணையில் இருந்தபோது அங்குள்ள கழிவறையில் இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஷாரோன்ராஜின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் சேர்ந்து கிரீஸ்மா வீட்டில் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் அவரது வீடு சேதமானது. கிரீஸ்மா கிருமிநாசினியை குடிக்கும்போது பணியில் இருந்தஇரு பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. கிரீஸ்மாவின் உடல்நிலை இப்போது சீராக உள்ளது. காதலி வீட்டில் மாம்பழச்சாறும், கசாயமும் ஷாரோன் குடித்துள்ளார். கசாயத்தில் களைக்கொல்லி மருந்தை கிரீஸ்மா கலந்திருக்கிறார். அவரது ஜாதகப்படி முதல் கணவர் இறந்துவிடுவார்.

இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

இரண்டாவது தாரமே தங்கும் என்று சொன்னதால் கிரீஸ்மா இதை அரங்கேற்றியதாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிரீஸ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இது தெரிந்தால் ஒரு வருட காலமாக ஷாரோன்ராஜ் உடன் சேர்ந்து சுற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியில் கசியவிட்டுவிடுவார் என்ற பயம் இருந்துள்ளது.இதுதான் முக்கிய காரணம் ஆகும். ஷாரோன் ராஜ் உடனான காதலை முறிக்க கிரீஸ்மா முயன்றுள்ளார்.

அது வெற்றி பெறாத தால் அவரையே கொலை செய்து காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் கிரீஸ்மா வின் தாய் சிந்து, அவரது மாமா நிர்மல் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளனர்.குற்றம் நடைபெற்ற சம்பவ இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இடம் என்பதால், இந்த வழக்கு தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!