கோவை கார் வெடி விபத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் திருச்சியில் நடைபெற்ற சோதனையில் செல்போனை ஆய்வு செய்வதற்காக கொண்டு சென்றுள்ளனர்.
கோவை கார் வெடி விபத்து
கோவையில் கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கார் வெடி விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் முதலில் விபத்து என நினைக்கப்பட்ட நிலையில் இது ஒரு கார் வெடி குண்டு என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இறந்த நபரின் வீட்டில் இருந்து வெடி பொருட்களுக்கான வேதி பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 6 பேரை கைது செய்து உபா சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தமிழக உளவுத்துறை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் கொடுத்த பட்டியல்கள் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் சோதனை
அந்த வகையில் திருவாரூர், நெல்லை, ராமநாதபுரம் என நடைபெற்ற சோதனை மேற்கொண்டனர். நேற்று நெல்லை மேலப்பாளையத்தில் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி(35) சையது முகமது புகாரி(36) முகமது அலி(38) முகமது இப்ராஹிம்(37) ஆகிய நால்வர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக முகமது அலி, ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும் அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர். இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள அந்த நான்கு பேர் வீடுகளிலும் தனித்தனியாக கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும்..! குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கும் திமுக கூட்டணி எம்பிக்கள்
திருச்சியில் போலீசார் சோதனை
இந்த சோதனையில் போலீசார் அந்த வீட்டில் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர். இதே போல திருச்சி வயர்லெஸ் சாலையில் வசிக்கும் அப்துல் முத்தலிப் மற்றும் ஜுபைர் அஹமது என்பவர் வீட்டில், கே.கே. நகர் சரக உதவி ஆணையர் சதீஷ்குமார் தலையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் அப்துல் முத்தலிப்க்கு சொந்தமான செல்போனை போலீசார் கைப்பற்றி, அவருக்கு யாரோடு தொடர்புகள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படியுங்கள்
திருமாவளவனை கைது செய்ய வேண்டும்..! மதம், சாதி மோதல் ஏற்பட்டால் தமிழக அரசே பொறுப்பு- பாஜக