காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்..!

By vinoth kumar  |  First Published Nov 1, 2022, 1:22 PM IST

ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது.


ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்..!

இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் செய்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த விவகாரத்தை அறிந்த காதலன் ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின்  வீட்டுக்கு சென்றார். அப்போது, ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். இதனை சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உடனே அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காதலனை காததலி கிரீஷ்மாவே விஷம் வைத்து கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக கிரீஷ்மா போலீசில் அளித்த வாக்குமூலத்தில் போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என காதலி கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலமாகியுள்ளது. வழக்கில் சிக்கிக்கொண்டால், எத்தனை வருடம் தண்டனை என்பதையும் முன்பே அலசி ஆராய்ந்துள்ளார். மேலும் ஷாரோன் விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான ஆதாரங்களை கிரீஷ்மாவின் தாயார் அழித்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரீஷ்மாவின் தாய், தாய் மாமன் உள்ளிட்ட 3 பேர் கைது ெசய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;-  அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

click me!