வேலூர் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அரசு உயர் ரக மதுபான விற்பனை கடை உள்ளது. இதில் மர்ம நபர்கள் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்கு உள்ளே புகுந்து ரூ. 3000 மதிப்பிலான பீர் பாட்டில்களை திருடி சென்றுள்ளனர்.
வேலூர் காட்பாடியில் உள்ள காங்கேயநல்லூரில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேற்பார்வையாளராக புகழேந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். அந்த டாஸ்மாக் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ள நிலையில் கடையை அவ்வபோது செல்போனிலேயே புகழேந்தி பார்த்துக் கொள்வார்.
இதையும் படிங்க..நவம்பர் 6ம் தேதி.! ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி - தமிழக காவல்துறை உத்தரவு
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். காலை கடையை ஆராய செல்போனை பார்த்தபோது அதில் சிசிடிவியுடனான இணைப்பு செயல்படவில்லை. இதனால் உடனடியாக அவர் கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்கையும் திருடர்கள் தூக்கி சென்றனர். கடையில் திருடப்பட்ட பொருட்கள் குறித்து மது இருப்பை சோதனை செய்ததில் 10 பீர் பாட்டில்கள் மட்டும் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அதிகரிக்கும் கொரோனா.. லாக்டவுனுக்கு பயந்து ஓடும் புலம்பெயர் தொழிலாளர்கள் - வைரல் வீடியோ!