பெற்ற மகளை சீரழித்து கர்ப்பிணியாக்கிய காமக்கொடூரம்.. தந்தை உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்.!

By vinoth kumar  |  First Published Nov 3, 2022, 1:04 PM IST

12 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுதத்து, சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 


பெற்ற மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த பாரதிபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுதத்து, சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளுக்கும், திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல்.. உல்லாசம்.. தடையாக இருந்த கணவர் கொலை.. கூலிப்படையை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதபடி பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அப்போது, தந்தைக்கும், தாய்க்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தந்தை என்னை சீரழித்ததாகவும், தந்தையின் நண்பர் கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறினார். இதுதொடர்பாக சிறுமி தந்தையிடம் கூறியபோதும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியுள்ளார். 

இதையும் படிங்க;-  ஆண்டிகளை வைத்து மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. உள்ளே புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்.!

 சிறுமியுடன் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அப்பகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமது ரபீக் என்பவர் பார்த்துள்ளார். இதனைதொடர்ந்து அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து, 3 பேர் மீது போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், 3 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி பாஸ்கரன் பரிந்துரையை ஏற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-  என்னை மட்டையாக்கிவிட்டு என் மனைவியுடன் மாஜாவாக இருப்பான்! கள்ளக்காதல் விவகாரத்தில் பிரகாஷ் கொலை! வெளியான பகீர்

click me!