ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் தனது காருக்கு பின்னால் இருந்த இருசக்கர வாகனத்தை எடுக்கச் சொன்ன கார் ஓட்டுநரின் கையை வெட்டிய பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் 1வது வார்டு ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜிணன் மகன் ராகுல் (வயது 24). வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். வாடகைக்கு சென்று விட்டு இரவில் வீட்டின் முன் காரை நிறுத்துவது வழக்கம். வழக்கம் போல் நேற்று இரவு காரை நிறுத்தி விட்டு மீண்டும் காலையில் வெளியில் செல்வதற்காக காரை எடுக்க சென்றுள்ளார்.
மோடியிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தால் நம்மை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்; கோவையில் சீமான் பேச்சு
அப்போது இவரது வீட்டின் எதிரே உள்ள சீனிவாசனுக்குச் சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுக்குமாறு ராகுல் கூறியுள்ளார். இதனால் சீனிவாசன் மனைவி சத்யா மற்றும் சத்யாவின் தாய் அருக்காணி ஆகிய இருவரும் ராகுலிடம் தகதாத வார்த்தைகளைக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே சத்யாவின் தாய் கட்டையால் ராகுலின் தலையில் அடித்துள்ளார்.
பின்னர் பாக்கு அரிவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிவாள் மனையால் சத்யா ராகுலின் கையை வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அலறிய ராகுலின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெத்தநாயக்கன் பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து ராகுலுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு துள்ளல் நடனமாடிய பொன்முடி; பெண்கள் உற்சாகம்
இதுகுறித்து ராகுலின் மனைவி கவிதா அளித்த புகாரி அடிப்படையில் ஏத்தாப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சத்யா மற்றும் தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருசக்கர வாகனத்தை எடுக்கச் சொன்ன தகராறில் கார் ஓட்டுனர் கையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.