கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.
12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 67 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 12 வயதில் மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் மணி (67) என்பவர் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி சிறுமியை மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கருப்பாக இருந்ததால் தனது 18 மாத மகளுக்கு விஷம் கொடுத்த கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..
இந்நிலையில், சிறுமி வீட்டிற்கு திரும்பி வந்த தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் முதியவர் மணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.
இதையும் படிங்க: மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலாதேவியை நினைவிருக்கா? தீர்ப்புக்கு தேதி குறித்த நீதிமன்றம்!
இதனையடுத்து முதியவர் மணியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 67 வயது முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.