நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கோவையில் பெட்டிக்கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலிலும் காலையில் தொடங்கி இரவு வரை தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சேரன் மாநகர் அருகே உள்ள வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. நேற்று இரவு சில இளைஞர்கள் பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டுவாங்கியுள்ளனர். சிகரெட்டுக்கான பணத்தை கடைக்காரர் கேட்டபோது தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கிருந்த சிலர் இளைஞர்களையும் கடை உரிமையாளரையும் சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசியது யார்.?
அப்போது பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள் சில மணி நேரத்தில் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டுவீசி உள்ளனர். இதனால் பெட்டிக்கடையின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாகபீளமேடு போலீசார் கூறும்போது, பீளமேடு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(25) சிகரெட் கேட்டு தகராறு செய்து கூட்டாளிகளுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.
இதில் பாட்டில் துண்டு துண்டாக உடைந்து சேதம் அடைந்துள்ளது .உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அது உடனடியாக அணைக்கப்பட்டது. பீளமேடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வரதராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதையும் படியுங்கள்