பாழடைந்த கட்டிடத்திற்கு தூக்கி சென்று விதவை பெண்ணை விரட்டி விரட்டி கேங் ரேப்.. நண்பர் கண்முன்னே நடந்த கொடூரம்

Published : May 23, 2022, 01:10 PM ISTUpdated : May 23, 2022, 01:12 PM IST
பாழடைந்த கட்டிடத்திற்கு தூக்கி சென்று விதவை பெண்ணை விரட்டி விரட்டி கேங் ரேப்.. நண்பர் கண்முன்னே நடந்த கொடூரம்

சுருக்கம்

அந்த பகுதிக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நகை மற்றும் ரூ.2000 பறித்தனர். பின்னர், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

நாமக்கல்லில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல்லை சேர்ந்தவர் 31 வயது விதவை பெண். இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், இவர் திருச்செங்கோட்டை சேர்ந்த அவரது ஆண் நண்பரும் கடந்த 19ம் தேதி இரவு நாமக்கல்லை அடுத்த வீசானம் ஏரிக்கு சென்று தனிமையில் பேசி கொண்டிருந்தனர்.  அப்போது, அந்த பகுதிக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நகை மற்றும் ரூ.2000 பறித்தனர். பின்னர், அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

மேலும் அதை பெண்ணின் நண்பருடைய செல்போனில் 4 பேர் கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி 'கூகுள் பே' மூலம் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம் எனக் கூறிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதனால் அவமானமடைந்த அந்த பெண் இதுதொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதை வைத்து, குற்றவாளியின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார் (21), வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (21), பெயிண்டர் முரளி (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோர் விதவையை தாக்கி கூட்டு பலாத்காரம் செய்ததோடு நகை, பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வல்லரசை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;- நினைக்கும் போதெல்லாம் பல நடிகைகளுடன் உல்லாசம்.. பணத்தை தண்ணீராய் வாரி இறைத்த நீராவி முருகன்.. அதிர்ச்சி தகவல்

இதையும் படிங்க;-  ரூம் போட்டு அளவுக்கு அதிகமாக மது குடித்து கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம்.. நேரில் பார்த்த ஊழியர் அதிர்ச்சி.!

 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!