என் பொண்டாட்டிக்கு 17 வயசா.?? கல்யாணம் செய்து, குழந்தை பெற்ற நிலையில் போக்சோவில் கைது செய்தது போலீஸ்..

Published : May 23, 2022, 12:54 PM IST
என் பொண்டாட்டிக்கு 17 வயசா.?? கல்யாணம் செய்து, குழந்தை பெற்ற நிலையில் போக்சோவில் கைது செய்தது போலீஸ்..

சுருக்கம்

17 வயது பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு  17 வயது மட்டுமே ஆகிறது என்பதைக் கூட தெரியாமல் அந்த இளைஞர்  திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

17 வயது பெண்ணை திருமணம் செய்து குழந்தை பெற்றெடுத்த இளைஞனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு  17 வயது மட்டுமே ஆகிறது என்பதைக் கூட தெரியாமல் அந்த இளைஞர்  திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சேர்ந்தவர் சதீஷ்குமார். சென்னை அம்பத்தூரில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் மதுராந்தகம் செய்யூரில் உள்ள உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் நடந்து முடிந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சென்னை திருமங்கலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சதீஷ்குமாரின்  மனைவி கர்ப்பம் அடைந்தார், இதனைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தாரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார். திடீரென மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையின் அரசு விதிமுறைகளின்படி பெண்ணின் ஒரிஜினல் ஆதார் கார்டு அட்ரஸ் ப்ரூப் கணவன் மனைவி இருவரும் பதிவு கொடுத்தனர். அதைப்பார்த்த தலைமை செவிலியர் அந்தப் பெண்ணுக்கு 17 வயது மட்டுமே நிரம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு குழந்தை  திருமணம் நடைபெற்றது குறித்து புகார் தெரிவித்தார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரசவ வார்டில் மயக்கநிலையில் இருந்த சதீஷ்குமாரின் மனைவியை சந்தித்தார், ஆனால் அவர் மயக்க நிலையில் இருந்ததால்  விசாரணை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனக்கும் சதீஷ் குமாருக்கும் இடையே இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது இருவரும் சென்னை திருமங்கலத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என கூறினார்.

இதனையடுத்து சிறுமியின் வழக்கை குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர் இதைத்தொடர்ந்து ஆய்வாளர் தொடர் விசாரணை நடத்தினார், அதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர் சதீஷ்குமார் இடம் விசாரணை நடத்தியபோது அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உன் மனைவிக்கு இப்போது எத்தனை வயது என்று கேட்டார் அதற்கு சதீஷ்குமார் இருபத்தி மூன்று வயது ஆகிறது என கூறினார். இல்லை உன் மனைவிக்கு 17 வயதுதான் ஆகிறது என கூறினார், அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் என்னது என் மனைவிக்கு 17 வயது தான் ஆகிறதா? என கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உண்மையிலேயே இந்த விஷயம் தனக்கு தெரியாது என அவர் கூறினார், இரு வீட்டார் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது என் மனைவிக்கு 17 வயது தான் ஆகிறது என்பது திருமணத்திற்கு முன்பு எனக்கு தெரியாது என கதறினார்.

அதாவது சிறுமிக்கு திருமணம் நடந்தபோது 16 வயது என்றும் தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் 17 வயது ஆகிறது என்றும் போலீசார் பதிவு செய்தனர். அதாவது தனக்கு பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சதீஷ்குமார் இனிப்பு வழங்கிக் கொண்டிருந்த நிலையில் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர், இந்நிலையில் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபட்க்கூடாது, நீங்கள் செய்தது மிகப் பெரிய தவறு, சிறு பெண்ணின் வாழ்க்கை இதனால் பாதித்திருக்கிறது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!