வீட்டு வாசலிலேயே அதிமுக முக்கிய பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... ரத்த வெள்ளத்தில் அலறல்..!

Published : May 23, 2022, 12:32 PM IST
வீட்டு வாசலிலேயே அதிமுக முக்கிய பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... ரத்த வெள்ளத்தில் அலறல்..!

சுருக்கம்

மணிகண்டன் தனது காரை வீட்டில் இருந்து நேற்று மாலை எடுத்து முயன்றுள்ளார். அப்போது, 2 பைக்குகளில் போதையில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனிடம் தகராறு செய்து கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினர்.

ஊரப்பாக்கம் அருகே வீட்டு வாசலில் இருந்து காரை எடுக்க முயன்ற அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு பகுதி, ராஜி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மகன் மணிகண்டன் (24). அதிமுக மாவட்ட மாணவரணி துணை தலைவராக உள்ளார். மேலும், இவர் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டன் தனது காரை வீட்டில் இருந்து நேற்று மாலை எடுத்து முயன்றுள்ளார். அப்போது, 2 பைக்குகளில் போதையில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணிகண்டனிடம் தகராறு செய்து கையில் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில், அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் பைக்குகளில் வந்த மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். 

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?