திடீரென உயிரிழந்த தந்தை.. துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி - மகன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

Published : Sep 14, 2022, 05:04 PM ISTUpdated : Sep 14, 2022, 05:05 PM IST
திடீரென உயிரிழந்த தந்தை.. துக்கம் தாங்க முடியாமல் 30வது நாளில் மனைவி - மகன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

கணவர் இறப்பை தாங்க முடியாமல், மனைவி மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிதம்பரம் நகரில் வசித்து வருபவர் சிதம்பரம். இவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரின் மனைவி சுபா. இந்த தம்பதிகளுக்கு முரளிராஜ் பாரதி என்ற மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். மகள்கள் திருமணம் முடிந்து தங்களது குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு..“அதிமுகவில் சசிகலா.. நேரம் குறிச்சாச்சு”.. எடப்பாடி பழனிசாமிக்கு திகில் காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர் !

முரளிராஜ் படித்துமுடித்துவிட்டு வேலையை தேடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதத்தில் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் மிகவும் சோகத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அவரது மனைவி சுபா மற்றும் மகன் முரளி பாரதி கணவரின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு துக்கம் தாங்க முடியாமல் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அக்கம்பக்கத்தினர் கதவு திறந்து நிலையில், இருவரும் வீழ்ந்து கிடந்ததை கண்டு சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

மேலும் செய்திகளுக்கு..air india : ஏர் இந்தியா விமானத்தில் கிளம்பிய புகை.. 141 பயணிகளின் கதி என்ன ? பதறவைக்கும் வைரல் வீடியோ !

தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித்தனியே கடிதம் எழுதியுள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?